பிரபு இடத்தை பிடித்த ஜெயராமின் 5 படங்கள்.. தேவயானி, மந்த்ராவை மயக்கிய கோபாலகிருஷ்ணன்

நடிகர்களுக்கே உரிய தனி திறமையான நகைச்சுவை உணர்வை கொண்டு சாதித்தவர் தான் நடிகர் ஜெயராம். இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

நடிப்பில் தனித்துவம் பெற்ற ஜெயராம் தமிழ் ரசிகர்களை தன் வசம் இழுத்துக்  கொண்டார் என்றே கூறலாம். மேலும் இவர் கன்னங்களில் விழும் குழி, சிரித்த முக அம்சம், நகைச்சுவை உணர்வு இவரை அடுத்த பிரபு என்ற பெருமையை பெற்று தந்தது. இவர் நடிப்பில் வந்த ஐந்து அசத்தலான படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

Also Read:தெனாலி ஜெயராமனா இது? 2 மாதத்தில் 12 கிலோ எடையை குறைத்துள்ளார் ஷாக் ஆகிடுவீங்க.! வைரலாகும் புகைப்படம்

முறைமாமன்: 1995ல் சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை படம் தான் முறைமாமன். இதில் கவுண்டமணி, குஷ்பூ, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் இவர் அண்ணன், அண்ணன் என்று சொல்லும் மாடுலேஷன் மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தது. மேலும் இவர்கள் இருவரின் அசத்தலான நடிப்பு இப்படத்திற்கு பெயர் வாங்கித் தந்தது.

பெரிய இடத்து மாப்பிள்ளை: 1997ல் தேவயானி, மந்த்ரா, ஜெயராம் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் தான் பெரிய இடத்து மாப்பிள்ளை. இப்படத்தில் இவர் டிரைவர் கோபாலகிருஷ்ணனாக இடம் பெற்றிருப்பார். மேலும் சின்னத்தம்பி,பெரிய தம்பியின் மகள்களான தேவயானி மற்றும் மந்த்ராவை காதலிப்பது போன்று கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். இப்படத்தில் வரும் இவரின் நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டது.

Also Read:கமலுக்கு ஜோடியாக திரிஷா இல்லனா நயன்தாரா.. ராசி இல்லாத நடிகை என ரிஜெக்ட் செய்த ரெட் ஜெயண்ட்

தெனாலி: 2000ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தெனாலி. இப்படத்தில் டாக்டர் கைலாஷ் ஆக இடம் பெற்றிருப்பார் ஜெயராம். மேலும் இவருடன் சேர்ந்து கமல் நடித்த நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது. இவர் இப்படத்தில் கமலை கலாய்த்து மிமிக்கிரி செய்வது போன்று அமைந்திருக்கும்.

பஞ்சதந்திரம்: 2002ல் வெளிவந்த இப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருப்பார். இப்படத்தில் கமல், ரம்யாகிருஷ்ணன், சிம்ரன், ஜெயராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருப்பார்கள். மேலும் ஐந்து நண்பர்களை மையமாக கொண்டு இக்கதை அமைந்திருக்கும். இவர் தன் நாயர் கதாபாத்திரத்தில் சிறப்புர நடித்திருப்பார். இப்படம் இவருக்கு பேர் சொல்லும்  படமாக அமைந்தது.

Also Read:தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகள்களா? அடேங்கப்பா! வாயடைத்துப் போன ரசிகர்கள்

துப்பாக்கி: 2012ல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் துப்பாக்கி. இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ராணுவ பயிற்சியில் பெரிய பொசிஷனில் இருக்கும் இவர் ஜூனியர் ஆன விஜய்யை கலாய்ப்பது போன்று அமைந்திருக்கும். இப்படத்தில் இவரின் நகைச்சுவை முக்கிய பங்கு அளித்தது என்றே கூறலாம்.