விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன வர்மன்.. இயக்குனராக எடுக்கும் புது ஆதாரம்

Vijay Sethupathi: முன்னணி ஹீரோவாக மக்கள் மத்தியில் இடம் பெற்று தன்னுடைய எதார்த்தமான நடிப்பை கொடுத்துட்டு வருகிறவர் தான் விஜய் சேதுபதி. அப்படிப்பட்ட இவர் எந்த நடிகர்களும் செய்யாத விஷயத்தை துணிச்சலுடன் செய்து வருகிறார் என்றே சொல்லலாம். அதாவது ஹீரோவாக நடிக்கும் போதே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வில்லனாகவும் மாறி சில படங்களில் மிரட்டி கொண்டு வருகிறார்.

இவருடைய நடிப்பு, டெடிகேஷன் மற்றும் எதார்த்தமான பேச்சு இது போன்ற அத்தனை விஷயங்களும் மக்களுக்கு மட்டுமல்லாமல் பல உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களுக்கும் இவருடைய கேரக்டர் மிகவும் பிடித்திருக்கிறது. அந்த வகையில் நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

Also read: அந்த நடிகை எனக்கு பொண்ணு மாதிரி, ஜோடி சேர முடியாது.. சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி

அப்படிப்பட்ட இவருடைய நடிப்பை பார்த்து ஒரு நடிகர் ரொம்பவே மிரண்டு போயிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதியிடம் நேரடியாகவே சென்று ஒரு நடிகருக்கு தேவையான அனைத்து குணங்களும் உங்களிடம் இருக்கின்றன. எனக்கு உங்களை ரொம்பவே பிடிக்கும். வித்தியாசமான கேரக்டர் உங்களிடம் இருக்கிறது.

அதனால் உங்களை வைத்து எனது முதல் படத்தை இயக்க விரும்புகிறேன். அதன் மூலம் தான் நான் இயக்குனராக அவதரிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என கூறியிருக்கிறார். அதனால் எனக்கு கண்டிப்பாக உங்களுடைய கால்ஷீட் வேண்டும். நீங்கள் எப்பொழுது கால்ஷீட் கொடுக்கிறீர்களோ அப்பொழுது என்னுடைய இயக்குனர் பயணத்தை நான் தொடங்கி விடுவேன் என விஜய் சேதுபதியிடம் கூறியிருக்கிறார்.

Also read: வெற்றிமாறனுக்கு டிமிக்கி கொடுக்கும் விஜய் சேதுபதி.. சூர்யா படத்தில் கைவைத்த கொடுமை

பொதுவாக விஜய் சேதுபதி தைரியமாக எந்த மாதிரியான ரிஸ்கையும் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அதனால் கண்டிப்பாக அந்த நடிகர் ஆசைப்பட்ட மாதிரி அவருடைய இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு சம்மதத்தை கூடிய விரைவில் கொடுத்து விடுவார்.

மேலும் விஜய் சேதுபதியை அதிக அளவில் விமர்சனம் கொடுத்து அவருடைய கால் சீட்டுக்கு கெஞ்சிய நடிகர் வேறு யாருமில்லை பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி தான். இதுவரை ஹீரோவாக நடித்து வந்த இவர் முதன் முதலில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறார். இதற்கான வேலைகள் விரைவில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also read: யாரும் வாங்கல, தியேட்டரிலும் மதிக்கல முடங்கி கிடந்த விஜய் சேதுபதியின் 5 படங்கள்.. ரூட்டை மாத்திய மக்கள் செல்வன்

- Advertisement -