வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

புதுசா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த 5 கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள்.. ரீ என்ட்ரியில் பிச்சு உதறும் கமல் நண்பர் 

தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய பிரபலங்கள் தங்களின் ரீ என்ட்ரி மூலம் புகழின் உச்சத்தை தொட்டுள்ளனர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தங்களின் நடிப்பின் மூலம் நடிக்கும் கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டு வந்து விடுகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளனர். அப்படியாக தமிழ் சினிமாவிற்கு புதிதாக கிடைத்த 5 கேரக்டர் ஆர்டிஸ்ட்கள் பற்றி இங்கு காணலாம்.

மாரிமுத்து: இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் மாரிமுத்து. தொடக்க காலத்தில் ராஜ்கிரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து புலிவால்  திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். அது மட்டும் அல்லாமல்  நடிகராக யுத்தம் செய், கொம்பன், மருது போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார். தற்பொழுது சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் தனது அல்டிமேட் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

Also Read: எல்லாருமே அரைகுறை நாய்ங்க.. அசிங்கப்படுத்தியதால் கொந்தளித்த எதிர்நீச்சல் குணசேகரன்

பாலாஜி சக்திவேல்: இயக்குனராக காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் வழக்கு எண் 18/9  என்ற படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருப்பார்.

மைம் கோபி: சின்னத்திரையின் மூலம் அறிமுகமான இவர் தற்பொழுது டாப் ஹீரோக்களின் படங்களில் மாஸ்காட்டி வருகிறார். அதிலும் 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் முரட்டுத்தனமான வில்லனாக தோன்றி ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மாரி, கதகளி, கபாலி போன்ற படங்களில் நடித்து பட்டையை கிளப்பியுள்ளார்.

Also Read: காணாமல் போன 5 தரமான கதாபாத்திரங்கள்.. யுத்தம் செய் ஜெ கேக்கு என்னாச்சு

பாக்ஸர் தீனா: சினிமாவில் துணை வேடங்களில் நடித்த சாய் தீனா பின்னர் அடியாள் வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவான விருமாண்டி படத்தில் சிறை வார்டனாக அறிமுகமானார். பின்னர் எந்திரன், தெறி, வடசென்னை போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு புடிச்சவன் திரைப்படத்தில் கொடூர வில்லனாக தெறிக்க விட்டிருப்பார்.

ஜி எம் சங்கர்: தயாரிப்பாளராக அறிமுகமான இவர் இயக்குனர் கே பாலச்சந்தர் மூலம் புன்னகை மன்னன் படத்தில், நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்த  சத்யா படத்தில் கமலின் நண்பராக தோன்றியுள்ளார். மேலும் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் முத்தழகன் எனும் கதாபாத்திரத்தில் பிச்சு உதறி இருப்பார்.

Also Read: சிலம்பரசனை தயாரிக்கும் கமலஹாசன்.. வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய உலக நாயகன்

- Advertisement -

Trending News