Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிலம்பரசனை தயாரிக்கும் கமலஹாசன்.. வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய உலக நாயகன்

சிம்புவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நடிகர் சிம்புவுக்கு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் பத்து தல. இந்த படம் வரும் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமலஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் சிம்புவை ரொம்பவும் பாராட்டி பேசி இருந்தார். இதுவே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்த போது தற்போது கமலஹாசன் அவருடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிம்புவின் 48வது படத்தை தயாரிக்க இருக்கிறார்.

Also Read: விஜய், அஜித், சூர்யாவுக்கு போட்டியாக உருவாக்குவேன்.. சிம்புவுக்கு வாக்கு கொடுத்த தயாரிப்பாளர்

நேற்று ட்விட்டரில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்களுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6:30 மணிக்கு வெளியிடுவதாக பதிவிட்டு இருந்தது. அதன்படி இன்று தங்களுடைய அடுத்த படத்தில் சிம்புவுடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முன்பு சிம்புவின் படத்தை தான் இவர்கள் அடுத்து தயாரிக்க இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாக ஆரம்பித்து விட்டன.

இந்நிலையில் நடிகர் சிம்பு கனவு நினைவானது என்று, தன்னுடைய அடுத்த படத்தின் அப்டேட்டை பதிவிட்டிருக்கிறார். மேலும் உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! என்று பதிவிட்டு சிம்புவுடன் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Also Read: கமல் ஹீரோயிசம் காட்டாத 6 படங்கள் .. உண்மையிலே இவர் பைத்தியமா என யோசிக்க வைத்த மூன்று படங்கள்

கமலஹாசன் சிம்பு என்னும் வெற்றி கூட்டணியில் படத்தை இயக்கப் போவது யாரும் எதிர்பார்க்காத இயக்குனர் தான். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்னும் ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் தேசிங்கு பெரியசாமி. இவர்தான் இப்பொழுது எஸ்டிஆரின் 48வது படத்தை இயக்குகிறார்.

str48

str48

‘காட்டுப் பசிக்கு விருந்து’ என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தேசிங்கு பெரியசாமி பதிவிட்டு சிம்புவின் 48 ஆவது திரைப்படத்தை தான் இயக்கப் போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தேசிங்கு அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணி புரிவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக இவர் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

Also Read: ரஜினி போல் பிழைக்கத் தெரியாத கமல்.. நல்லது செஞ்சும் வாங்கும் கெட்ட பெயர்

Continue Reading
To Top