இதுவரை பிக்பாஸ் டைட்டிலை வென்ற 5 பிரபலங்கள்.. இப்ப என்ன செய்றாங்க தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்கள் முடிந்து தற்போது ஆறாவது சீசனை ஆரம்பித்துள்ளது. இதுவரை மக்களின் ஆதரவால் ஐந்து பிரபலங்கள் இந்த டைட்டிலை தட்டி சென்றுள்ளனர். அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இங்கு காண்போம்.

ஆரவ் ஏராளமான விளம்பர படங்களில் நடித்திருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லாத நபராக தான் வந்தார். ஆனால் போகப் போக இவர் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தினார். மேலும் ஓவியாவுடன் காதல் போன்ற பிரச்சனைகளில் சிக்கினாலும் இவருக்கு ஏராளமான ஓட்டுகள் கிடைத்தது. அதன் காரணமாகவே இவர் பிக் பாஸ் சீசன் ஒன்றின் டைட்டிலை வென்றார். அதன் பிறகு மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ், ராஜ பீமா போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Also read:பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மர்மம்.. அலறியடித்து வெளியே ஓடிய பிரபலம்

ரித்விகா பரதேசி, மெட்ராஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டார். பக்குவமான, அமைதியான இவருடைய நடவடிக்கை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதனாலேயே இவர் அந்த சீசன் டைட்டிலை வென்றார். அதன் பிறகு கபாலி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் பெரிய அளவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனாலேயே இப்போது பலரும் இவரை மறந்து விட்டனர்.

முகேன் ராவ் இதுவரை ரசிகர்களை கவர்ந்த ஒரே சீசன் என்றால் அது இந்த மூன்றாவது சீசனாக மட்டும் தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இந்த நிகழ்ச்சி சென்றது. இதில் பங்கு பெற்ற முகேன் ராவ் ரசிகர்களின் ஆதரவுடன் டைட்டிலை வென்றார். அதன் பிறகு ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்த இவர் தற்போது ஆல்பம் பாடல்களில் பாடி வருகிறார்.

Also read:சண்டையை மூட்டிவிட்டு ஆட்டத்தை ஆரம்பித்த பிக்பாஸ்.. முதல் வார நாமினேஷன் லிஸ்டில் 4 போட்டியாளர்கள்

ஆரி அர்ஜுனன் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் இவருக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏனென்றால் வீட்டில் உள்ள அனைவருக்குமே இவரை பிடிக்காமல் இருந்தபோது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் இவருக்கு சப்போர்ட் செய்தனர். அதனாலேயே இவர் இந்த சீசனின் டைட்டிலை வென்றார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் உடன் அவர் இணைந்து நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவருடைய அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ராஜு ஜெயமோகன் ராஜு பாய் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் கடந்த சீசனின் வெற்றியாளர் ஆவார். கலகலப்பான இவருடைய பேச்சும், டைமிங் காமெடியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த டைட்டிலை வென்ற பிறகு நிச்சயம் இவர் படம் இயக்குவார் என்று எதிர்பார்த்த வேளையில் இன்னும் அவர் விஜய் டிவியில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

Also read:மெர்சலாக்கிய விஜய் டிவி.. பாலிவுட் ஸ்டைலில் இருக்கும் பிக்பாஸ் வீட்டின் செலவு மட்டும் இவ்வளவா?

Next Story

- Advertisement -