வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மீ டூ பிரச்சனையால் சினிமாவே வேண்டாம் என தலை தெறிக்க ஓடிய 5 நடிகைகள்.. வரலட்சுமியை சீண்டிய தயாரிப்பாளர்

Actress faced MeToo issue: சினிமாவில் நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லைகளை அந்த காலத்திலிருந்து அனுபவித்து தான் வருகிறார்கள். சமீபத்தில் காமெடி ஹீரோயின்கள் கூட தாங்கள் சந்தித்த அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லைகளை பற்றி மனம் திறந்து பேசி வருகிறார்கள், அந்த வகையில் இந்த 5 ஹீரோயின்கள் இதுபோன்ற மீ டூ பிரச்சனையால் தேடி வந்த பல வாய்ப்புகளை இழந்து இருக்கிறார்கள்.

தன்யா ரவிச்சந்திரன்: நடிகை தன்யா ரவிச்சந்திரன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த கருப்பன் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். முதல் படம் என்று தெரியாத அளவுக்கு தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின்னர் 1,2 படங்களில் நடித்த இவர், இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகளால் இப்போது படங்களில் நடிப்பதில்லை. காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்த நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி இவர்.

Also Read:நடிச்ச அஞ்சு படமும் அட்டர் பிளாப்.. மணிரத்தினம் கைகொடுத்தும் கரை சேர முடியாத நடிகை

காயத்ரி: தன்னுடைய எளிமையான முக வசீகரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகை காயத்ரி, கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நடிக்கும் நடிகைகளில் ஒருவர். நல்ல நடிப்பு திறமை இருந்தும் இவர் அதிகமான படங்களில் நடிப்பதில்லை. இதற்கு காரணம் மீ டூ பிரச்சனை தான். சமீபத்தில் இவர் விக்ரம் படத்தில் நடிகர் பகத் வாசலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

வரலட்சுமி சரத்குமார்: நடிகை வரலட்சுமி சரத்குமார் சினிமா வாய்ப்புகளுக்காக பல வருடம் போராடி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவான சரத்குமாரின் மகளாக இருந்தும் இவர் பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகளை சந்தித்து இருக்கிறார். இதனாலேயே ஆரம்ப காலத்தில் இவர் நிறைய படங்களில் நடிக்கவில்லை. இவர் தன்னுடைய பேட்டியில் ஒரு தயாரிப்பாளர் வீட்டிற்கு வந்து அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியதாக சொல்லி இருந்தார்.

Also Read:அஜித், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து துணிக்கடையை நடத்தி வரும் நடிகை.. மொத்தமாக கைநழுவி போன வாய்ப்புகள்

சிருஷ்டி டாங்கே : நடிகை சிருஷ்டி டாங்கே தமிழில் மேகா மற்றும் டார்லிங் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். நல்ல அழகான நடிகையாக இருந்தும் இவர் படங்களில் நடிப்பதில்லை இதற்கு காரணம் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை தான். நீண்ட வருடங்களுக்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மியா ஜார்ஜ் : நடிகை மியா ஜார்ஜ் தமிழில் அமரகாவியம் மற்றும் இன்று நேற்று நாளை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். நல்ல நடிப்பு திறமை இருந்தும் இவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை. இதற்கு காரணம் மீ டூபிரச்சனை தான் இதெல்லாம் நமக்கு செட்டாகாது என மியா ஜார்ஜ் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

Also Read:திரிஷா போல் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை.. புதுப்பட அப்டேட்டால் பதறும் ஹீரோயின்கள்

- Advertisement -

Trending News