திரிஷா போல் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை.. புதுப்பட அப்டேட்டால் பதறும் ஹீரோயின்கள்

திரிஷா ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி இடத்தில் இருந்தார். ஆனால் சில காரணங்களினால் மார்க்கெட் சரிய அக்கட தேசத்திற்கு போய்விட்டார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதனால் எக்கச்சக்க பட வாய்ப்பு திரிஷாவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். இது தவிர சில படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் திரிஷா தான் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது திரிஷா போல் தமிழ் சினிமாவில் நடிகை ஒருவர் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

Also Read: திரிஷா போல் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை.. புதுப்பட அப்டேட்டால் பதறும் ஹீரோயின்கள்

ஆடுகளம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை டாப்ஸி. சினிமாவுக்கு வந்த சில காலத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்து விட்டனர். அதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் இங்கு டல்லடிக்க பாலிவுட் பக்கம் பறந்து விட்டார்.

அங்கு முன்னணி நடிகையாக டாப்ஸி வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் அங்குள்ள தேவையில்லாத சில விஷயங்களை பேசி தனது பெயரை கெடுத்துக் கொண்டதால் மார்க்கெட் போய்விட்டது. இதனால் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு டாப்ஸி வந்த நிலையில் கையில் நிறைய படங்களை வைத்திருக்கிறார்.

Also Read: ஹீரோக்களுக்கு இணையாக சிக்ஸ் பேக்ஸ் வைத்த ஆடுகளம் நடிகை.. வைரலாகும் டாப்ஸி புகைப்படம்

அந்த வகையில் ஏலியன் என்ற டைட்டிலில் டாப்ஸி நடிக்க இருக்கிறார். கே 13 படத்தின் புகழ் பரத் நீலகண்டன் இப்படத்தை இயக்க பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் விஎப்எக்ஸ்-க்கு மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி படக்குழு செலவு செய்ய உள்ளனராம்.

ஏலியன் படத்தின் கதை இந்தியாவில் வேற்று கிரகவாசிகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டு வருகிறது. டாப்ஸி ஏலியனாக நடித்து வருகிறார். கண்டிப்பாக ஏலியன் படம் டாப்ஸியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறாராம். டாப்ஸியின் இந்த படத்தின் அறிவிப்பால் தமிழ் சினிமாவில் உள்ள மற்ற நடிகைகள் தங்கள் மார்க்கெட் போய்விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்.

Also Read: ஒரே வருடத்தில் அறிமுகமாகி கல்யாணத்தால் காணாமல் போன 5 நடிகைகள்.. 20 வருஷமா சொல்லியடிக்கும் திரிஷா!

Sharing Is Caring:

அதிகம் படித்தவை