ஓவர் கவர்ச்சி காட்டி வாய்ப்பை பெற்ற 5 நடிகைகள்.. தவம் கிடந்து சான்ஸ் கொடுக்கும் சுந்தர் சி

ஹீரோயின்களை பொறுத்தவரை பட வாய்ப்பு பெற தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. படத்தில் தான் விரும்பும் கதாபாத்திரம் கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதுப்புது முகங்கள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றார்கள். இந்நிலையில் அவர்களை எதிர்த்து போட்டி போட்டு தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் இருக்கின்றனர். அவ்வாறு ஓவர் கவர்ச்சி காட்டி வாய்ப்பை பெற்ற 5 நடிகைகள் பற்றி இங்கு காணலாம்.

Also Read: பிகில் முதல் தளபதி68 வரை விஜய் வாங்கிய சம்பளம்.. ரஜினியையே ஓரம் கட்டிய ஏறுமுகம்

தமன்னா: ஆரம்ப காலத்தில் கல்லூரி படத்தில் இருந்த தமன்னாவா இது என்று வியக்கும் அளவிற்கு முன்னணி ஹீரோயின் ஆக தன்னை தக்க வைத்துக் கொள்ள சில கவர்ச்சியான நடிப்பில் நடிக்க தொடங்கினார் தமன்னா. அதிலும் குறிப்பாக சிறுத்தை படத்தில் இவர் இடம் பெறும் காட்சிகள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.

சாக்ஷி அகர்வால்: தமிழ் சினிமாவில் சில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 ல் இவர் கவர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். மேலும் இப்படம் இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

Also Read: மரண அடி வாங்க போகும் விஜய்.. அடுத்த முதல்வர் என சுற்றித்திரிந்தவரை மறந்த இளையதளபதி

பூனம் பஜ்வா: தெலுங்கில் தன் சினிமா பயணத்தை தொடங்கியவர். அதைத்தொடர்ந்து தமிழில் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்தில் மஞ்சு கதாபாத்திரத்தில் தன்னுடைய கவர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த முக்கால்வாசி படத்தை சுந்தர் சி தான் இயக்கியிருப்பார்.

சாயிஷா: வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் சாயிஷா. ஜெயம் ரவி, ஆர்யா, கார்த்தி போன்ற முன்னணி ஹீரோவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். தற்பொழுது பட வாய்ப்பு இழந்துவரும் இவர் பத்து தல படத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருப்பார். இமேஜ் பார்க்காமல் வாய்ப்புக்காக இத்தகைய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் சாயிஷா.

Also Read: அக்கடதேச நடிகருக்கு வில்லனாக மாறும் கமல்.. மொத்த பட்ஜெட்டில் பாதியை சுருட்டிய உலகநாயகன்

ரெஜினா: ஹிந்தி படங்களில் அறிமுகமானவர் ரெஜினா. அதன்பின் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழி படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் கசடதபற, தலைவி, பார்ட்டி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்று இருப்பார். இவர் தன் கவர்ச்சியான நடிப்பால் தெலுங்கில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.