அரசியல்வாதிகளின் வலையில் சிக்கிய 5 நடிகைகள்.. வீடியோவில் ஆதாரத்தை வெளியிட்ட விஜயலட்சுமி

சினிமாவில் தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் அதே ஜோடி இணைந்து நடித்தால் உடனே செய்தித்தாள்களில் அந்த நடிகர், நடிகைகள் பெயரில் கிசுகிசுக்கப்படும். ஆனால் சில அரசியல் பிரபலங்களுடன் நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டு உள்ளனர். அவ்வாறு அரசியல்வாதிகளுடன் வெளியே கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகளை இப்போது பார்க்கலாம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா : தமிழகத்தை ஆட்சி செய்த இருபெரும் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. இதில் ஜெயலலிதா எம்ஜிஆருடன் 28 படங்களுக்கு மேற்பட்ட இணைந்து நடித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கிசுகிசுக்கள் வெளியானது. அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆருக்கு பிறகு அவரது கட்சியை ஜெயலலிதா வழிநடத்தினார்.

சீமான், விஜயலட்சுமி : நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் நடிகை விஜயலட்சுமி உடன் கிசுகிசுக்கப்பட்டார். அதாவது விஜயலட்சுமி தற்கொலை முயற்சி எடுத்ததாக வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் விஜயலட்சுமி மற்றும் சீமான் இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் தற்போது தன்னை திருமணம் செய்துகொள்ள சீமான் மறுக்கிறார் எனவும் கூறினார். இந்தச் செய்தி அப்போது பூதாகரமாக வெடித்தது.

குட்டி ராதிகா, குமாரசாமி : ஷாம், அருண் விஜய் நடிப்பில் வெளியான இயற்கை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் குட்டி ராதிகா. கன்னட முதலமைச்சர் குமாரசாமி மற்றும் குட்டி ராதிகாவை இணைந்து 2008ல் கிசுகிசு வெளியானது. ஆனால் 2010ல் குட்டி ராதிகா எங்களுக்கு ஏற்கனவே 2006 இல் திருமணம் நடைபெற்றதாகவும், ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் கூறி இருந்தார்.

சுகன்யா, எம் பி : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சுகன்யா. இவர் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த சின்ன கவுண்டர் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சுகன்யா திருமணமான ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற நிலையில் எம்பி ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார்.

நயன்தாரா, உதயநிதி ஸ்டாலின் : நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளனர். அதிலும் கதிர்வேலன் காதல், நண்பேண்டா படங்கள் தொடர்ந்து வெளியானது. இதனால் அப்போது செய்தித்தாள்களில் இவர்கள் இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியானது. அதுமட்டுமல்லாமல் ஒரு அமைச்சரும் இதை பொது மேடையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

Next Story

- Advertisement -