படக்குழுவுக்கு தங்க காசு கொடுத்த விஷால் பட நடிகை.. அவரோட மார்க்கெட் தான் அதல பாதாளத்தில் கிடக்கு

Actor Vishal: விஷால் மிகப்பெரிய ஹிட் படம் எப்போது கொடுத்தார் என்பதே நினைவில்லாத அளவுக்கு தொடர்ந்து ப்ளாப் படங்களை கொடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி ஓவர் ஆட்டிட்யூட் மற்றும் படப்பிடிப்புக்கு சரியாக வராத காரணத்தினால் அவருக்கு பட வாய்ப்புகளும் இப்போது குறைந்துவிட்டது.

அதுமட்டுமின்றி இப்போது உடம்பில் உள்ள பிரச்சனை காரணமாக கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையில் விஷாலுக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருந்து வருகிறது. ஆனால் விஷால் படத்தில் நடித்த நடிகைகள் பலரும் இப்போது மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார்கள்.

Also Read : தாராளமாக கவர்ச்சி காட்ட ஒரு கோடி சம்பளம்.. விஷால் பட மில்க் பியூட்டி செய்த மட்டமான வேலை

அந்த வகையில் விஷாலின் திமிரு படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் விஷால் பட நடிகை மட்டுமல்லாமல் அவரது அண்ணி ஆவார். இப்போதும் ஸ்ரேயா படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலாம் படம் உருவாகி வருகிறது.

பாகுபலி நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டி, பிரித்திவிராஜ் போன்ற பிரபலங்களும் நடிக்கின்றனர். மேலும் சலாம் படத்தில் திமிரு படத்தை போல் துணிச்சலான வில்லி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளாராம்.

Also Read : தொடர் பிளாப், ஆயுர்வேத சிகிச்சை என படாத பாடுபடும் விஷால்.. அந்த ஒரு பட்டத்தை கொடுத்து பத்த வச்ச நடிகை

இப்போது அவர் நடிக்க வேண்டிய காட்சி எல்லாமே படமாக்கப்பட்டுள்ளதாம். இதை கொண்டாடும் விதமாக ஸ்ரேயா ரெட்டி தன்னுடைய உதவியாளர்களுக்கு தங்க காசுகளை பரிசாக வழங்கி இருக்கிறார். நடிகைகள் இவ்வாறு தங்க காசு வழங்குவது இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில் ஸ்ரேயா ரெட்டியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் இவர் சலார் படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஓ ஜி படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். அதுமட்டுமின்றி சலார் படம் வெளியானால் கண்டிப்பாக இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு விஷால் நடிகைகளின் வளர்ச்சி மிகப்பெரிய உயரத்தை அடைந்து வரும் நிலையில் அவரின் மார்க்கெட் தான் அதல பாதாளத்திற்கு சென்று வருகிறது.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்