சௌந்தர்யா நடிப்பில் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. படையப்பா உடன் நீலாம்பரியை கதறவிட்ட படம் 

தமிழ் சினிமாவில் பொன்னுமணி என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சௌந்தர்யா. அதிலும் தனது வசீகரமான முகத்தால் எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் பல சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்திருந்தார். அப்படியாக சௌந்தர்யா நடிப்பில் பட்டையை கிளப்பிய 6 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

அருணாச்சலம்: சுந்தர்.சி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அருணாச்சலம். இதில் ரஜினிகாந்த் உடன் சௌந்தர்யா, ரம்பா, மனோரம்மா, வடிவுக்கரசி ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் வேதவல்லி ஆதிகேசவன் என்னும் கதாபாத்திரத்தில் சௌந்தர்யா சூப்பர் ஸ்டாரின் காதலியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. 

Also Read: கன்னடத்து பைங்கிளி சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிகையா? சுத்தமா செட்டாகாது!

படையப்பா: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா. இதில் ரஜினிகாந்த் உடன் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் மணிவண்ணனின் தந்திரத்தால் சொத்துக்களை எல்லாம் இழந்து மீண்டும் தனது கடின உழைப்பின் மூலம் எவ்வாறு முன்னேற்றம் அடைகின்றனர் என்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் சௌந்தர்யா, வசுந்தரா என்னும் கதாபாத்திரத்தில் படையப்பா உடன்  சேர்ந்து நீலாபரியையே கதற விட்டிருப்பார். இதனைத் தொடர்ந்து இந்த படமானது ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

காதலா காதலா: சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலா காதலா. இதில் கமலஹாசன் உடன் பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் சௌந்தர்யா, சுந்தரி என்னும் கேரக்டரில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் இப்படம் சிறந்த நகைச்சுவை படமாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

Also Read: சௌந்தர்யா கடைசியா சொன்னது அப்படியே நடந்திருச்சு.. மனம் உருகிய இயக்குனர்

பொன்னுமணி: ஆர் பி உதயகுமார் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னுமணி. இதில் கார்த்திக், சௌந்தர்யா, சிவகுமார், கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சௌந்தர்யா இப்படத்தில் சிந்தாமணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அதிலும் இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் படம் சிறப்பான வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது

தவசி: இயக்குனர் உதயசங்கர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தவசி. இதில் விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மேலும் விஜயகாந்த் உடன் சௌந்தர்யா, ஜெயசுதா, நாசர், வடிவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் சௌந்தர்யா இப்படத்தில் விஜயகாந்தின் காதலியாக பிரியதர்ஷினி என்னும் ரோலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாகவே இருந்து வருகிறது.

அம்மன்: இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அம்மன். இதில் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, ரமி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் சௌந்தர்யாவின் குடும்பத்தை கொடுமைப்படுத்தும் அரக்கனை அம்மன் துணையோடு எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் இப்படத்தில் சௌந்தர்யா அம்மனாகவே அவதாரம் எடுத்து  நடிப்பில் மாஸ் காட்டி இருப்பார். அது மட்டுமல்லாமல் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்தது.

Also Read: நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்.. 175 நாட்கள் ஓடிய ரஜினியின் தரமான 10 படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்