ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கவுண்டமணியின் டைமிங்கை கச்சிதமாய் பிடிக்கும் 5 நடிகர்கள்.. கெமிஸ்ட்ரியில் பின்னி பெடலெடுத்த விஜய்

சினிமா துறையில் காமெடியில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் தான் கவுண்டமணி. அதிலும் டாப் நடிகர்களின் படங்களில் இவர் அடித்த லூட்டியானது இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும்  பிரபலமாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் படங்களில் இவர் அடிக்கும் கவுண்டர்களுக்கு டைமிங்கை கணக்கச்சிதமாய் பிடிக்கும் 5 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

செந்தில்: ஒரு காலகட்டத்தில் இயக்குனர்கள் இவர்கள் இருவரின் கூட்டணியை வைத்தே பல ஹிட் படங்களை கொடுத்து வந்தனர். அந்த அளவிற்கு இவர்களின் காமினேஷன் ஆனது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது என்றே சொல்லலாம். அதிலும் படங்களில் கவுண்டமணியிடம் அடி வாங்கும் கேரக்டரில் தான் அதிகமாக செந்தில் நடித்திருப்பார். கரகாட்டக்காரன், சமுத்திரம், சின்ன கவுண்டர் போன்ற படங்களில் இவர்கள் அடிக்கும் லூட்டியானது  இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

Also Read: சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படும் நடிகை.. 150 படங்கள் நடித்தும் கவுண்டமணி லவ்வர் படும் பாடு

சத்யராஜ்: சினிமாவில் மலபார் போலீஸ், குங்கும பொட்டு கவுண்டர்,ரிக்க்ஷா மாமா போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். மேலும் சத்தியராஜின் கோயம்பத்தூர் லொள்ளு பேச்சுடன் கவுண்டமணி அடிக்கும் காமெடி ஆனது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாகவே இருந்தது. அதிலும் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் ஹிட் படங்களாகவே அமைந்தது.

கார்த்திக்: நவரச நாயகனாக வலம் வரக்கூடியவர் தான் கார்த்திக். அதிலும் படங்களில் கவுண்டமணியின் லொள்ளு பேச்சிற்கு ஈடு கொடுத்து நடிக்க கூடியவர் ஆவார். இதனைத் தொடர்ந்து இவர்களின் காம்போவில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக போன்ற படங்களில் கவுண்டமணி கார்த்திக் உடன் அடித்த லூட்டியானது இன்றும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

Also Read: காமெடியன் வில்லன் அவதாரம் எடுத்து வெற்றி கண்ட 8 ஹீரோக்கள்.. அரசியல்வாதியாக மிரட்டி விட்ட கவுண்டமணி

ரஜினிகாந்த்: சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதிலும்  கவுண்டமணியுடன் இணைந்து இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். மன்னன், எஜமான், பாபா போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து கலக்கிய காமெடி ஆனது ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது என்றே சொல்லலாம். 

விஜய்: சினிமாவில் தளபதி விஜய், காமெடி நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து சில படங்களில் மட்டுமே நடித்திருப்பார். ஆனால் இவர்கள் இருவரின் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் படத்தில் இவர்கள் அடித்த லூட்டி அல்டிமேட் ஆக இருக்கும்.

Also Read: கவுண்டமணியின் காதல் லீலைகளை அவிழ்த்து விட்ட பயில்வான்.. காது கூசும் அளவுக்கு விமர்சனம்

- Advertisement -

Trending News