ஃபுல் போதையில் இந்த 5 நடிகர்கள் என்ன செய்வாங்க தெரியுமா.? கேப்டன் ஜென்டில்மேன் தான்

Top 5 Tamil Actors: சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் என்ன செய்தாலும் அது வெளியில் தெரிந்துவிடும். அதுவும் அவர்கள் நல்லதை விட கெட்டது செய்வது அம்பலமாயிரும். அதிலும் சினிமாவில் இருக்கும் டாப் 5 நடிகர்கள் முழு போதையில் என்ன செய்வாங்க என்பது வெளிவந்துள்ளது.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எவ்ளோ குடித்தாலும் சைடிஷ் சாப்பிட மாட்டார். ஆனால் குடித்ததனால் நிறைய பிரச்சனையை உடல் ரீதியாக சந்தித்து வெளிநாடுகளில் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு உயிர் தப்பித்து, இப்போது அந்த பழக்கத்திலிருந்து மீண்டும் வந்துள்ளார். தன்னுடைய ரசிகர்களிடமும் கையெடுத்து கும்பிட்டு குடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்.

Also Read: சுயலாபத்திற்காக அரசியலில் குதித்த 5 ஹீரோக்கள்.. மண்டபத்தை இடித்ததால் கேப்டன் உருவாக்கிய வரலாறு

கவுண்டமணி: இவரும் நிறைய குடிக்க கூடியவர். எதற்காக குடித்தார் என்றால் எல்லா நேரமும் ஷூட்டிங் இருக்கும். தூங்க டைம் இருக்காது, ஒரு நாள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் தூங்க முடியும். அந்த சில நேரங்களில் நல்லா தூங்க வேண்டும் அதற்காக குடிப்பாரு. இவரும் நிறைய குடித்ததால் இவருடைய உடம்பு ரொம்பவே மோசமானது. அதற்கான சிகிச்சை எடுத்த பின் கடவுள் புண்ணியத்தில் ஒரு வழியா உயிர் பிழைத்திருக்கிறார்.

விஜயகாந்த்: இவர் டிரிங்க்ஸ் இல்லாம இருக்க மாட்டாரு, குடிப்பதையும் மிகவும் ரசித்துக் குடிப்பாரு. குடித்துவிட்டு தான் நடிக்கப் போவார். அந்த சமயத்தில் படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் அவருடன் நெருங்கி நடிக்கும் போது குடித்த ஸ்மெல் வந்திடக் கூடாது என்பதற்காக பர்ஃப்யூம் என்ற வாசனை திரவியம் யூஸ் பண்ணுவாரு. ஃபுல் போதையில் இருந்தாலும் எந்த பிரச்சனையும் பண்ணாத ஜென்டில்மேன் தான் கேப்டன்.

Also Read: ஒரே ஒரு போன் தான், ஓடோடி வந்த விஜயகாந்த்.. பழசை மறந்த விஜய், குத்தி காட்டிய நடிகர்

எம் ஆர் ராதா: நகைச்சுவை நடிகராகவும் வில்லனாகவும் கோலிவுட்டில் ரவுண்டு கட்டியவர் தான் எம் ஆர் ராதா. அதிகம் குடிக்க கூடியவர் எம் ஆர் ராதா, ஆனால் குடித்தாலும் யாரையும் தப்பா பேச மாட்டார். போதை தலைக்கேறினாலும் ஸ்டடி ஆக நிற்பது மட்டுமல்லாமல் வாய் ஒளர மாட்டார். இதுதான் அவரோட ஸ்பெஷல்.

சுருளி ராஜன்: 80களில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக இருக்கக்கூடிய இவர், அளவு கடந்து குடிக்க கூடியவர். மது மட்டுமே வாழ்க்கை என்று இருந்து, வெறித்தனமான அந்த பழக்கத்தால் 42 வயதிலேயே இறந்து போனார். இந்த ஒரு கெட்ட பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சுருளி ராஜன் இன்னும் நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்கலாம்.

Also Read: 300 படங்கள் மேல் நடித்து ஒரு விருது கூட வாங்காத நடிகர்.. ஒட்டுண்ணியாக வாழ்ந்து அரசியலால் அழிந்த ஹீரோ

Next Story

- Advertisement -