இவங்கலாம் இயக்குனர்களா என ஆச்சரியமூட்டும் 5 நடிகர்கள்.. விஜய் படத்தை இயக்கிய கருங்காலி

Actors Become Directors: தமிழ் சினிமாவில் டைரக்டர்களாக பணிபுரிந்து அதன் பின் நடிகர்களாக அவதாரம் எடுத்த ஐந்து பேரை பார்த்ததும் இவர்களெல்லாம் இயக்குனர்களா என ஆச்சரியப்பட வைக்கின்றனர். அந்த ஐந்து நடிகர்களை பற்றி பார்ப்போம்.

தருண் கோபி:  விஷாலின் திமிரு படத்தை இயக்கியதன் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் தருண் கோபி, அடுத்ததாக சிம்புவின் காளை என்ற படத்தையும் இயக்கினார். அதன் பிறகு நடிகராக மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தில்  மணிவண்ணனின் இளைய மகனான பரமன் என்ற கேரக்டரில்  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

அதன் பிறகு இவர் பேச்சியக்கா மருமகன், பேய காணோம், காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். என்னதான் இவர் இயக்குனராக இருந்து 2 படங்களை எடுத்திருந்தாலும், நடிகராக தான் ரசிகர்களிடம் பரீட்சியமானார். அப்படிப்பட்ட இவரை ஒரு டைரக்டர் என்ற கோணத்தில் பார்க்கும்போது வியப்பளிக்கிறது.

Also Read: கேரவன்க்குள்ளே விஜய் நண்பர்களை வச்சு செஞ்ச அஜித்.. பேட்டியில் உண்மையை உடைத்த சஞ்சீவ்

ரமேஷ் கண்ணா: அஜித் குமார் நடித்த ‘தொடரும்’ என்ற ஒரே ஒரு  படத்தை இயக்கி விட்டு அதன் பிறகு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் டாப் நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கியவர். அதிலும் பிரண்ட்ஸ் படத்தில் சூர்யா மற்றும் விஜய் இருவரின் நெருங்கிய நண்பராக ரமேஷ் கண்ணா தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராகவே மாறினார். இது மட்டுமல்ல இவர் சில படங்களுக்கு வசனம் மற்றும் திரை கதையும் எழுதி உள்ளார். இவரும் ஒரு இயக்குனராக இருந்தவர் என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 

விஜய் நண்பர் ஸ்ரீநாத்: 2009 ஆம் ஆண்டு முத்திரை, அதன் தொடர்ச்சியாக  2014 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்  போன்ற இரண்டு படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத். இவர் இந்த இரண்டு படங்களை இயக்குவதற்கு முன்பே  விஜய்யின் நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அவருக்கு நண்பராக நடித்து தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர். அதன் பிறகு ஏகப்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் வட்டாரம் படத்தில் வீணாவின் அண்ணனாகவும், உன்னாலே உன்னாலே படத்தில் வைத்தியநாதன் கேரக்டரிலும், பீமா படத்தில் குரு கதாபாத்திரத்திலும் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் குணா கேரக்டரிலும், மாசிலாமணி படத்தில் கதிர் என்பவராகவும் ஈரம் படத்தில் விக்கியாகவும் வேட்டைக்காரன் படத்தில் வளையாபதியாகவும் நடித்து அசத்தியவர். நடிகர் ஸ்ரீதர் ஒரு இயக்குனர் என்ற தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.  

Also Read: விஜய்யுடனே பயணித்த உயிர் நண்பன்.. இப்போது கண்டும் காணாமல் இருக்கும் தளபதி

அங்காடித்தெரு வெங்கடேஷ்: விஜய்யின் பகவதி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் வெங்கடேஷ். இந்த படத்திற்கு பிறகு  இயக்குவதை தவிர்த்து விட்டு நிறைய படங்களில் நடிக்க துவங்கி விட்டார். அதிலும்  வெங்கடேஷ் நடிப்பில் வெளியான அங்காடித்தெரு படத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அந்தப் படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக கருங்காலி என்ற கேரக்டரில்  மிரட்டி இருப்பார்.

இந்த படத்தில் கடையில் தன்னைப் போல வேலை செய்பவர்களை மனசாட்சியே இல்லாமல் அடிமைகள் போல் வேலை வாங்கி சக்கையாய் பிழிந்திருப்பார். இவர் இப்போது சின்னத்திரையிலும் சன் டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கோவிந்த மூர்த்தி: கரண் நடிப்பில் வெளியான கருப்பசாமி குத்தகைதாரர் என்ற படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் கோவிந்த் மூர்த்தி. இந்த படத்திற்கு பிறகு வெடிகுண்டு முருகேசன், பப்பாளி போன்ற படங்களையும் இயக்கினார். ஆனால் படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பில் ஆர்வம் கொண்டு  வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

அதிலும் இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் பிச்சைக்காரனாகவே கருப்பு பணத்தை ஒழிக்க, எஃப்எம் ரேடியோவில் ஐடியா கொடுக்கும் நபராக நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு தொண்டன், கொளஞ்சி, ராட்சசன், ஈஸ்வரன் போன்ற படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்து அசத்தினார்.

Also Read: மாஸ்டர் படத்தில் மாளவிகாவுக்கு குரல் கொடுத்த விஜய் டிவி பிரபலம்.. அடேங்கப்பா இவங்களுக்கு இவ்வளவு திறமையா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்