சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கேரவன்க்குள்ளே விஜய் நண்பர்களை வச்சு செஞ்ச அஜித்.. பேட்டியில் உண்மையை உடைத்த சஞ்சீவ்

90களில் இருந்து இப்போது வரை அஜித், விஜய் இருவரிடமுமே போட்டா போட்டி நிலவி வருகிறது. என்னதான் இவர்கள் திரை மறைவில் நண்பர்களாக இருந்தாலும், சினிமாவை பொறுத்தவரை ஒருவர் மற்றவரை முந்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் செயல்படுகின்றனர்.

இந்த சூழலில் தான் எதார்த்தமாக அஜித்தை பார்க்க சென்ற விஜய்யின் நண்பர்களை, கேரவனுக்குள்ளே வச்சு செஞ்ச விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் சஞ்சீவ் உடைத்துப் பேசி உள்ளார். விஜய் நண்பர் சஞ்சீவ்விடம் சமீபத்தில் நடந்த ஒரு தனியார் பேட்டியில் அஜித்தை பற்றி கேட்டிருக்கிறார்கள்.

Also Read: ஏற்கனவே ஒர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. புது மருமகளுக்கு ரூட் போடும் ஏகே 62 படக்குழு

அதற்கு சஞ்சீவ், தல என்னைக்கும் தல தான். எதற்கும் கவலைப்பட மாட்டார். யாரைப் பற்றியும் பயப்பட மாட்டார் நேரடியாக பேசக்கூடியவர். பத்து வருடங்களுக்கு முன்பு நானும், விஜய்யின் நண்பரான ஸ்ரீநாத் இருவரும் அஜித்தை பார்க்க படப்பிடிப்பிற்கு சென்றோம்.

நாங்கள் இருவருமே விஜய்யின் நெருங்கிய நண்பர் என்று அஜித்திற்கு நன்றாக தெரியும். எங்களை வந்தவுடன் அழைத்து கேரவன் அழைத்து சென்றார். உள்ளே சென்றதும் நன்றாக பேசியவர், எங்களுக்கு சாப்பிட ஜூஸ் எல்லாம் கொடுத்தார்.

Also Read: ஐம்பதை தாண்டியும் இந்திய அளவில் சாதனை படைக்கும் விஜய், அஜித்.. முதல் முறையாக ஒன்றாக கொண்டாடும் ஃபேன்ஸ்

உடனே சஞ்சீவ் இடம், எனக்கு ஒரு ஆசை, உங்க பிரண்ட் விஜய் ஜெயிக்கணும். அவருக்கு மேல இன்னும் ரெண்டு ஸ்டெப் மேல நானும் போகணும் என்று யோசிக்காமல் சொன்னார். அதான் அஜித். நாங்கள் விஜய்யின் நண்பர்கள் என்று தெரிந்தும், அவர் மனதில் பட்டதை பேசியது அஜித்தின் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியது.

இதை விஜய்யிடம் கூறினோம். அவரும் சிரித்துக்கொண்டே சூப்பர்ல, மனசுல பட்டதை யோசிக்காமல் பேசிட்டார் இல்ல. அவரும் அதை தான் சொன்னான் ‘அதான் அஜித்’ என்று சிரித்துக் கொண்டே அந்த பேட்டியில் கூறினார். இந்த சுவாரசியமான விஷயத்தை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போது ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.

Also Read: ஏகே 62 வாய்ப்புக்காக போட்டி போடும் நடிகைகள்.. தீயாய் வேலை செய்யும் வாரிசு நடிகை

- Advertisement -

Trending News