விஜய்யுடனே பயணித்த உயிர் நண்பன்.. இப்போது கண்டும் காணாமல் இருக்கும் தளபதி

தளபதி விஜய் கல்லூரி காலத்தில் இருந்து நடித்த சில நடிகர்களை தனது படங்களில் நடிக்க வைத்துள்ளார். அப்படிதான் நடிகர் சஞ்சீவ், ஸ்ரீநாத் போன்ற நடிகர்கள் விஜய்யின் படங்களில் நடித்துள்ளனர். இதில் சின்னத்திரை நடிகரான சஞ்சீவ் பல வருடங்களுக்குப் பிறகு மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்திருந்தார்.

இவர்கள் கல்லூரி கால நண்பர்கள் இருந்தாலும் விஜய்க்கு சினிமாவிற்கு வந்த பிறகு நிறைய நண்பர்கள் இருந்துள்ளனர். அப்படி ஆரம்ப காலங்களில் விஜய் உடன் நிறைய படங்களில் ஹிட் கொடுத்த நடிகர் சமீப காலமாக சினிமாவில் தலை காட்டாமல் உள்ளார். அதை விஜய்யும் கண்டு கொள்ளாதது வேதனையாக இருக்கிறது.

Also Read : விஜய் கேட்டும் விட்டுக் கொடுக்காத அஜித்.. 23 வருடங்களுக்குப் பிறகு உண்மையை உடைத்த இயக்குனர்

அதாவது இயக்குனர் இமயம் பாலச்சந்தரால் பல நடிகர், நடிகைகள் சினிமாவில் உள்ளனர். அந்த வகையில் காமெடி நடிகர் தாமு பாலச்சந்தரால் தான் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார். இவர் விஜய்யின் நிறைய படங்களில் அவருக்கு நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதாவது நாளைய தீர்ப்பு, பத்ரி, நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், போக்கிரி, கில்லி போன்ற படங்களில் தாமு விஜயுடன் நடித்திருப்பார். திரைப்படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் இவர்கள் நண்பர்களாகத்தான் இருந்துள்ளனர். இப்போது தாமு சினிமாவை விட்டு முற்றிலுமாக ஒதுங்கி விட்டார்.

Also Read : அவசர அவசரமாய் விஜய் சந்தித்த 3 தயாரிப்பாளர்கள்.. கடைசி தடவை வார்னிங் கொடுத்த தளபதி

அதாவது சினிமாவில் இருந்து விலகி மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக பல சேவைகளை செய்து வருகிறார். இதற்காக தேசிய கல்வியாளருகான கௌரவ விருதையும் தாமு பெற்றிருக்கிறார். மேலும் இவருடைய காமெடி இப்போதும் படங்களில் போட்டால் ரசிகர்கள் பார்க்கும் படியாக இருக்கும்.

மேலும் இவரை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்து கொண்டிருக்கிறது. விஜய் இப்போது படிப்படியாக உச்ச நட்சத்திரமாக மாறி உள்ள நிலையில் அவரது நட்பு வட்டாரமும் மாறி உள்ளது. ஆகையால் அவரது ஆரம்பகால திரை உள்ளதாக நட்புகள் இப்போது அவரது படத்தில் இடம்பெறுவதில்லை.

Also Read : விஜய் சேதுபதி-மிஷ்கின் கூட்டணியில் ஏற்பட்ட பிளவு.. கடுப்பில் இயக்குனர் செய்த சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்