சமந்தா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்கும் ஆன்ட்டி நடிகை.. 40 வயதிலும் ஐட்டம் டான்ஸ் ஆட இவ்வளவு ஆசையாம்

ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்த நடிகைகள் மார்க்கெட் இழந்ததும் டாப் நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுவார்கள். ஆனால் இப்போது உள்ள ட்ரெண்டே வேறு மாதிரி மாறி உள்ளது. ஏனென்றால் இப்போதும் சமந்தாவுக்கு மார்க்கெட் உச்சத்தில் தான் உள்ளது.

இப்படி இருக்கும் சூழலில் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாட்டின் மூலம் சமந்தாவின் மார்க்கெட் இன்னும் உயர்ந்தது. அது மட்டும் இன்றி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகாவை விட சமந்தாவுக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது.

Also Read : குஷ்பூவுக்கு பிறகு சமந்தாவுக்கு கிடைத்த கௌரவம்.. பிறந்தநாளுக்கு இப்படி எல்லாம் செய்வீங்க

அதாவது சமந்தா ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு மட்டும் 1.5 கோடி சம்பளம் பெற்றிருந்தார். மேலும் சமந்தாவை போல் சமீபத்தில் பத்து தல படத்தில் ஆர்யாவின் மனைவி சாயிஷா குத்தாட்டம் போட்டிருந்தார். இந்தப் பாடலுக்கு 40 லட்சம் சம்பளமாக சாயிஷா பெற்றிருந்தார்.

அதேபோல் இப்போது ஒரு நடிகை 40 வயதில் ஐட்டம் டான்ஸ் ஆட ஆர்வமாக இருக்கிறார். அதாவது ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரேயா சரண். மேலும் மிகக் குறுகிய காலத்திலேயே இவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் சரியா தொடங்கியது.

Also Read : துவண்டு போன ரசிகர்களை குஜால் படுத்த ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் அந்த டான்ஸ் மறக்க முடியுமா

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். இப்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் ஸ்ரேயாவிடம் போலா சங்கர் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட தயாரிப்பாளர் கேட்டுள்ளார். சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட ஒரு கோடி ரூபாய் சம்பளமாக ஸ்ரேயா கேட்டுள்ளாராம். இதைக் கேட்ட தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்து உள்ளதாம். 40 வயதாகியும் கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை என்பதால் ஸ்ரேயாவை அழைத்ததற்கு அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதால் தயாரிப்பு நிறுவனம் வாயடைத்து போய் உள்ளது.

Also Read : அந்த இடத்துல முடி இருந்தா இப்படித்தான்.. தயாரிப்பாளரை பப்ளிக்காக அசிங்கப்படுத்திய சமந்தா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்