புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

4 நிமிடம் நீடித்த கிஸ்.. ஒட்டுமொத்த திரையுலகத்தையே ஆச்சரியப்படுத்திய டிராகன் லேடி

இன்றைய காலகட்டத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் நெருங்கி நடிக்க அவ்வளவு ஒன்றும் தயங்கம் காட்டுவதில்லை. சமீப காலமாக வெளியாகும் படங்களில் எல்லாம் லிப் லாக் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறுகிறது. இளசுகளும் இதை தான் விரும்புவதால், கல்லா கட்டுவதற்காகவே இயக்குனர்களும் முத்த காட்சிகளை அவசியமாக்குகின்றனர்.

ஆனால் அன்றைய காலகட்டங்களில் அவ்வாறு கிடையாது. கதாநாயகி கதாநாயகன் உடன் நெருங்கி நடிக்கவே அச்சப்படுவார்கள். அந்த காலத்தில் ஒரு நடிகை நீண்ட நேர முத்த காட்சியில் நடித்து திரை உலகையே வாயடைக்க வைத்தார். 30களில் வெளியான படம் ஒன்றில் முத்த காட்சி மட்டும் நான்கு நிமிடம் வரை நீடித்தது.

இந்த காட்சி வெளியானதும் பெரும் சர்ச்சைகள் வெடித்தன. ஆனால் இந்த சர்ச்சைக்குரிய காட்சியில் நடிப்பதற்கு அந்த நடிகர் நடிகைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. காரணம் அவர்கள் இருவரும் நிஜத்தில் கணவர் மனைவி என்பதால்தான். அதனால் தான் இந்த காட்சியை படம் ஆக்குவதில் இயக்குனருக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை.

Also Read: அட்ஜஸ்ட்மெண்டுக்கு நோ சொன்னதால் வன்மத்தை காட்டிய கேமரா மேன்.. கதாநாயகி வாய்ப்பே வேண்டாம் என ஓடிய நடிகை

நச்சுனு இருந்த அந்த காட்சியை கொஞ்சம் கூட தயங்காமல் இயக்குனரும் திரையில் பகிரங்கமாக காட்டியதுதான், பெரும் சர்ச்சையானது. இந்த படத்திற்குப் பிறகு நடிகையை தான் கழுவி கழுவி ஊற்றினார்கள். நடிகைக்கு தனிப்பட்ட சில விருப்பங்களும் இருந்தன. அவர் ரொம்பவே சிகரெட் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார்.

இதை அவர் ரசிகர்களிடம் மறைக்காமல் அம்பலப்படுத்தினார். இதனால் தான் அவரை டிராகன் லேடி என்றும் சொன்னார்கள்.  பின்னாளில் அவர், தன்னுடைய கணவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். அதே நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து ஹிட் படத்தையும் கொடுத்தார்.

ஆனால் கணவரின் மறைவுக்குப் பிறகு நடிகை தனியாக தங்களின் தயாரிப்பு நிறுவனத்தை நடத்த சிரமப்பட்டார். பின்பு அவர் ரஷ்ய ஓவியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டிலனார். பின்பு 50 வருடங்களாக அவர் ஊடக வெளிச்சம் இல்லாமல் வாய்ந்து மறைந்தார்.

Also Read: பெட் ரூமுக்கு வா, சான்ஸ் தரேன்.. நடிகையிடம் ஓபனாகவே கேட்ட பிரபல இயக்குனர் 

- Advertisement -spot_img

Trending News