ஜி பி முத்துவை கார்னர் செய்யும் 4 போட்டியாளர்கள்.. ஸ்கெட்ச் போட்டு துரத்த காத்திருக்கும் ஆர்மி

பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இப்படி ஒரு ஆதரவு எந்த போட்டியாளருக்கும் கிடைத்திருக்காது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஓப்பனிங் நாளிலேயே ரசிகர்கள் பலரையும் கவர்ந்த ஜி பி முத்து அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் நிகழ்ச்சியை படு சுவாரசியமாக கொண்டு செல்கிறார்.

இவரைப் பார்ப்பதற்காகவே டிவி முன் ஆஜராகும் ரசிகர்கள் ஏராளம். வெகுளியான பேச்சும், நடவடிக்கையும் இவரை சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக வைத்துள்ளது. மேலும் இவருக்காக ஒரு தனி ஆர்மியும் தொடங்கப்பட்டு இவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறது.

Also read : நானா அப்படி செஞ்சேன், கதறி அழுத ஜிபி முத்து.. டிஆர்பி-காக மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

அதிலும் ஜி.பி முத்துவுக்கு எதிராக யார் இருந்தாலும் அவரை எலிமினேட் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு ஆர்மியினர் தீயாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வைக்கும் விதமாக தற்போது நான்கு போட்டியாளர்கள் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

அதாவது நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ராபர்ட், தனலட்சுமி, ஆயிஷா, சாந்தி ஆகிய நால்வரும் ஜி பி முத்துவை ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றனர். அதிலும் ராபர்ட், ஜிபி முத்துவின் பயந்த சுபாவத்தை வைத்தே அவரை கலாய்ப்பது, பயமுறுத்துவது என்று பார்க்கும் ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்கிறார்.

Also read : ஷூட்டிங் ஸ்பாட்டையே அல்லோலப்படுத்தும் ஜி பி முத்து.. தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த அதிசயம்

அவருக்கு அடுத்தபடியாக தனலட்சுமி ஜிபி முத்துவின் மீது எப்போதும் ஒரு வன்மத்துடனே சுற்றிக் கொண்டிருக்கிறார். தேவையில்லாமல் அவரைப் பற்றி பேசுவது, வம்பு இழுப்பது என்று லிமிட்டை தாண்டி சென்று கொண்டிருக்கிறார். அவரைப் போலவே ஆயிஷாவும் ஒரு உள்நோக்கத்துடனே ஜி பி முத்துவை கார்னர் செய்கிறார்.

இயல்பாக அவர் மற்ற நபர்களுக்கு செய்யும் உதவியை கூட இவர் ஓவராக பேசியது ஜிபி முத்துவின் ரசிகர்களை கோபப்படுத்தி வருகிறது. அவரைப்போலவே டான்ஸ் மாஸ்டர் சாந்தியின் அவரிடம் அடிக்கடி சண்டை போடுகிறார். எதார்த்தமாக பேசும் அவரை இப்படி நான்கு போட்டியாளர்களும் கட்டம் கட்டுவது ஜி பி முத்து ஆர்மியினரை உசுப்பேற்றி உள்ளது. இதனால் அவர்கள் அந்த நான்கு பேரையும் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே துரத்த நாள் குறித்துள்ளனர்.

Also read : கேர்ள் பிரண்டே இல்லையாம், ப்ரோ அதுல நீங்க ஒன்னாம் நம்பர்.. ரட்சிதாவை பார்த்து ஊத்திய ஜொள்ளால் மிதக்கும் பிக்பாஸ் வீடு

- Advertisement -