ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

திருமணம் ஆகாமலேயே நக்மா குடும்பம் நடத்திய 4 பிரபலங்கள்.. லிவிங் டுகெதர் போதும் என மாறிய ஒண்டிக்கட்டை

Actress Nagma: 90களில் கிளாமர் குயின்னாக கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நக்மா. இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கார்த்திக், சரத்குமார் மற்றும் பல ஹீரோகளுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்கள் மனதில் நச்சென்று ஒரு இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அப்படிப்பட்ட இவர் தற்போது வரை கல்யாணம் செய்யாமலேயே ஒண்டிகட்டையாக வாழ்ந்து வருகிறார்.

அதற்குக் காரணம் இவர் முன்னணி ஹீரோயினாக நடித்த காலத்தில் கிட்டத்தட்ட நான்கு பிரபலங்களுடன் காதல், டேட்டிங் என உல்லாசமாக இருந்திருக்கிறார். இதனால் இவர் கிசுகிசுவில் அதிகமாக சிக்கியதால் அந்த நேரத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதனால் தான் தற்போது 48 வயது ஆகியும் தனிமையில் இருந்து வருகிறார். முக்கியமாக இவர் காதலித்த பிரபலங்கள் அனைவருமே திருமணம் ஆனவர் என்பது தான் குறிப்பிடத்தக்கது. அப்படி இவர் எந்தப் பிரபலங்களுடன் காதல் வயப்பட்டார் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

Also read: ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல போட்டி போட்டு நடித்த 5 அக்கா தங்கை நடிகைகள்.. நக்மாவை ஓரமாக உட்கார வைத்த ஜோ

கிரிக்கெட் வீரர் கங்குலி: இவர் முன்னணி நடிகையாக ஜொலித்த காலத்தில் கங்குலி உடன் வெளிப்படையாகவே கிசுகிசுக்கப்பட்டார். அதாவது 2001 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஏற்பட்ட காதலால் லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருவரும் இருந்து வந்திருக்கிறார்கள். இதைத் தெரிந்து கொண்ட கங்குலி குடும்பத்தில் பிரச்சனை வெடித்ததால் நக்மா இவரை விட்டு பிரிந்து விட்டார்.

சரத்குமார்: கங்குலியை விட்டு பிரிந்து வந்த சோகத்தில் படங்களில் நடித்து வந்த இவர் சரத்குமார் உடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் மூலம் இவர்கள் இருவருக்கும் ரகசிய தொடர்பு ஏற்பட்டது. ஆனாலும் சரத்குமாருக்கு திருமணம் ஏற்கனவே ஆகி இருக்கிறது என்று தெரிந்தும் நக்மா அதை பொருட்படுத்தாமல் சரத்குமாருடன் தொடர்பில் இருந்தார். பின்பு இந்த விஷயம் வெளியே தெரிந்ததால் சரத்குமார் குடும்பத்தில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் இவரிடம் இருந்தும் நக்மா ஒரேடியாக விலகி விட்டார்.

Also read: இளசுகளை கிறங்கடித்த நக்மாவின் 5 படங்கள்.. 25 படங்களுக்குப் பின்னர் அடித்த ஜாக்பாட்

ரவி கிஷான்: தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த பிறகு மும்பையில் இவருடைய முத்திரையை பதிப்பதற்காக நக்மா அங்கே போய்விட்டார். அப்பொழுது ரவி கிஷானும் நக்மாவும் 1998ல் “கங்கா மையா தோஹே பியாரி சட்டைபோ” என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்பொழுது ரவி கிஷான் மீது நக்மாவிற்கு தீராத காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ரவி கிஷான் ஏற்கனவே திருமணம் ஆனவர். அத்துடன் நான்கு குழந்தைக்கு அப்பாவாக இருக்கிறார் என்று தெரிந்ததால் நக்மா இவரை விட்டு பிரிந்து விட்டார்.

மனோஜ் திவாரி: போஜ்புரி நடிகரான இவருடன் நக்மா ரகசிய உறவில் இருந்து வந்தார். ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியே லீக் ஆனதால் நக்மா அதிகமான சர்ச்சையில் சிக்கினார். அதன் பின்பு இதெல்லாம் பொய் எங்களுக்குள் எந்தவித உறவும் இல்லை என்று அப்படியே பூசி மழுப்பி விட்டார்கள். அதிலிருந்து இந்த நடிகரை நக்மா எட்டிக் கூட பார்க்கவில்லை. இப்படி தொடர்ந்து திருமணம் ஆகாமலேயே இந்த நான்கு பிரபலங்களுடன் குடும்பத்தை நடத்தி வந்ததால் கல்யாணமே வேண்டாம் என்று வெறுத்து விட்டார்.

Also read: நக்மா முதல் நமீதா வரை.. மகள் வரலட்சுமி முன்னாலேயே மேடையில் கலாய்க்கப்பட்ட சரத்குமார்

- Advertisement -

Trending News