திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல போட்டி போட்டு நடித்த 5 அக்கா தங்கை நடிகைகள்.. நக்மாவை ஓரமாக உட்கார வைத்த ஜோ

சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஒரே வீட்டில் இருந்து அக்கா தங்கைகள் இருவரும் ஆர்வத்துடன் வந்து நடித்திருக்கிறார்கள். அப்படி வந்து ஒரு ரவுண்டு கலக்கி தமிழ் சினிமாவில் இவருடைய பெயரை நிலை நாட்டி விட்டார்கள். ஆனாலும் இவர்களுக்குள் நீயா நானா என்று போட்டி போட்டு ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.

அம்பிகா ராதா: இவர்களில் முதலில் சினிமாவிற்கு என்ட்ரி ஆனது அம்பிகா. இவர் அந்த ஏழு நாட்கள் என்ற படத்தில் பாக்கியராஜ் உடன் நடித்ததில் இருந்து மிகவும் பரிச்சயமான நடிகையாக வந்து பல படங்களிலும் ஜோடி போட்டு நடித்தார். அதன் பின்பு தான் இவரை பார்த்து கத்துக்குட்டியாக வந்தார் ராதா. ஆனால் இவர் வந்தது பின் இவருடைய அக்காவையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு மிகவும் பிரபலமான நடிகையாக பேரும் புகழும் பெற்றார். இவர்கள் இருவருமே முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

Also read: சினிமாவே ஒரு ஹாப்பி தான் என விட்டு போன 6 நடிகர்கள்.. ஜோதிகா உருகி உருகி காதலித்த நடிகர்

ஊர்வசி கல்பனா: ஒரே வீட்டில் இருந்து இவர்கள் இருவரும் சினிமாவிற்கு நுழைந்திருந்தாலும் கல்பனாவை விட ஊர்வசி தான் அதிக அளவில் பேமஸ் ஆகி நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் ஊர்வசி நடித்த முந்தானை முடிச்சு, மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் மற்றும் எட்டுப்பட்டி ராசா போன்ற படங்களை எல்லாம் மறக்க முடியுமா. இவருடைய நடிப்பு மறக்க முடியாத அளவிற்கு எதார்த்தத்துடன் இருக்கும். இவரின் நடிப்புக்கு பின்னால் இவருடைய அக்கா கல்பனா கொஞ்சம் டம்மி ஆகிவிட்டார்.

நக்மா ஜோதிகா: இவர்கள் ஒரே வீட்டில் இருந்து சினிமாவிற்கு பாய்ந்து வந்திருந்தாலும் ஒண்ணுக்கு ஒன்னு சலிச்சது இல்லை என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நக்மா நடித்த படங்களின் மூலம் அதிக அளவில் ஃபேமஸ் ஆகி முன்னணி ஹீரோயினாக வலம் வந்திருந்தாலும் ஜோதிகா அளவிற்கு இல்லை என்றே சொல்லலாம். இன்னும் கொஞ்சம் சொல்லப்போனால் நக்மாவை ஓரமாக உட்கார வைத்து கனவு கன்னியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் ஜோதிகா.

Also read: 50 வயசு ஆகியும் கல்யாணம் ஆகாத 6 நடிகைகள்.. ஜோதிகாவின் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை

ராதிகா நிரோஷா: இதில் அக்காவை பார்த்து கத்துக்குட்டியாக நிரோஷா சினிமாவிற்கு வந்தார். இவர் நடித்த படங்கள் ஓரளவுக்கு ஹிட் ஆகியிருந்தாலும். இவரால் தொடர்ந்து நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. ஆனால் ராதிகா அனைத்து முன்னணி ஹீரோளுக்கும் ஜோடியாக நடித்து இவருக்கு என்று சினிமாவில் தனி முத்திரையை பதித்து விட்டார். நிரோஷாவால் ராதிகா பக்கத்தில் நெருங்க முடியாத அளவிற்கு உயரத்தில் வளர்ந்து விட்டார்.

ஸ்ருதிஹாசன் அக்ஷராஹாசன்: இவர்கள் இருவரும் தன்னுடைய அப்பாவின் புகழால் சினிமாவிற்கு ஈசியாக நுழைந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் கத்துக்குட்டியாக தான் வளர்ந்து வருகிறார்கள். அதிலும் சுருதிஹாசனை விட அக்ஷரா ஹாசன் தற்போது தான் நடிப்பில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். இதில் ஸ்ருதிஹாசன் தமிழில் ஓரளவுக்கு பரிச்சயமான பிறகு தெலுங்கில் பிஸியாக நடிக்க போய்விட்டார்.

Also read: அஜித், விஜய் விட நாங்க ஒன்னும் கொறஞ்சவங்க இல்ல.. மேடையில் குமுறிய ஸ்ருதிஹாசன்

- Advertisement -

Trending News