திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சரத்குமார் உருகி உருகி காதலித்த 4 நடிகைகள்.. அவ என் ஆளுன்னு அஜித் போட்டா சண்டை தெரியுமா?

4 actresses that Sarathkumar fell in love with: 2026 சட்டசபை தேர்தலில் வென்று முதல் அமைச்சர் ஆவேன் என்று தீரா தன்னம்பிக்கையுடன் இருக்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வந்தவர். ரியல் லைஃப், ரீல் லைப் இரண்டிலும் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்த சுப்ரீம் ஸ்டார் சினிமா அரசியல் என இரண்டையும் ஒன்றாக பேலன்ஸ் பண்ணி வெற்றிகரமாக தன் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இன்று வரை பல சவாலான கேரக்டர்களை துணிச்சலுடன் ஏற்று வெற்றி நாயகனாகவே திகழ்ந்து வரும் சுப்ரீம்  ஸ்டாரின் வாழ்க்கையை புரட்டி போட்ட 4 நடிகைகளை பற்றி காணலாம்,

நக்மா: விஜயகாந்தின் புலன் விசாரணை திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமான சரத்குமார் திரைத்துறைக்கு வரும் முன்பே சாயா என்பவரை காதலித்து மணமுடித்து இருந்தார். ஜானகிராமன் படத்தில் நடித்த நக்மா மற்றும் சரத்குமாருக்கு ஏற்பட்ட இடையே ஏற்பட்ட காதலால் சாயா உடனான குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டது என தகவல்கள் பரவின.

Also read: ராதிகாவுக்கும் வரலட்சுமிக்கும் இருந்த மனஸ்தாபம்.. உண்மையை போட்டு உடைத்த சரத்குமார்

ஹிரா: பேண்ட் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் ஹீரா மற்றும் சரத்குமார் இணைந்து நடித்திருந்தனர். ஹீராவை ஒருதலையாக உருகி உருகி காதலித்தாராம் சரத்குமார். அதற்கு முன்பாகவே ஹீரா காதல்கோட்டையில் தன்னுடன் இணைந்து நடித்த அஜித்துடன் காதல் வயப்பட்டு இருந்ததால் கடுப்பான அஜித், இது என் ஆளு! என்று சரத்குமாரின் ஷூட்டிங்கில் ஹீராவுடன் காரில் சென்று கொஞ்சி வெறுப்பேத்தியதாக தகவல்.

சிவரஞ்சனி: 90ஸ்களில் கிளாமர் குயின் ஆக தமிழ் ரசிகர்களை அடிப்படைத்த சிவரஞ்சனி, சரத்குமாருடன் அரண்மனை காவலன் படத்தின் ஒன்றாக இணைந்து நடித்தனர். அந்த சமயம் சரத்குமார் மற்றும் சிவரஞ்சினியை பற்றி சர்ச்சை செய்திகள் தமிழ் திரை உலகில் பரவின.

ராதிகா: 2000 ஆண்டு சரத்குமார் தன் மனைவி சாயாவை விவாகரத்து செய்ததை தொடர்ந்து 2001ல் தீவிரமாக காதலித்து வந்த ராதிகாவை கரம் பிடித்தார் சரத்குமார். திருமணத்திற்கு முன் தனது காதல் ரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட சரத்குமார் அவர்களை நண்பனாகவும் கணவனாகவும் மனமார ஏற்றுக் கொண்டார் ராதிகா.

Also read: செகண்ட் இன்னிங்ஸில் தவறவிட்ட 5, 80ஸ் ஹீரோக்கள்.. கொடி கட்டி பறக்கும் சரத்குமார்

- Advertisement -

Trending News