கமலஹாசன் வாரிசு அடுத்து நாங்கள் தான் என போட்டி போடும் 4 நடிகர்கள்.. உலக நாயகன் கொடுத்த சர்டிபிகேட்

Actor Kamal: கமலின் அனுபவத்திற்கு முன் யாரும் இருக்க முடியாது என்பது உண்மையான கூற்று தான். ஆனால் தமிழ் சினிமாவில் இவரின் உன்னதமான நடிப்பிற்கு தற்போது போட்டியாய் களமிறங்கிய 4 நடிகர்கள் யார் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு உருமாறி நடிக்கும் வல்லமை கொண்டவர் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் படிப்படியாக நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு களம் இறங்கிய இவரின் நடிப்பிற்கு பிறகு இனி நாங்க தான் என போட்டி போடும் 4 நடிகர் தான் தனுஷ், பகத் பாஸில், சூர்யா, துல்கர் சல்மான்.

Also Read: லோகேஷ் கனகராஜ் இயக்கி, வசூலில் தெறிக்கவிட்ட 5 படங்கள்.. கொஞ்ச நாளில் 500 கோடியை தொட்டுப் பார்த்த மனுஷன்

அசுரனில் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று வெற்றி கண்ட தனுஷ், வாத்தி படத்திற்கு பிறகு தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக நடித்த வருகிறார். மேலும் கேப்டன் மில்லர், தனுஷ்50 போன்ற படங்களில் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்க போவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாய் வலம் வந்து கை கொடுக்காத நிலையில் தற்போது தமிழில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று கலக்கி வரும் பகத் ஃபாசிலின் நடிப்பை கண்டு விக்ரம் படத்தில் கமலே வியந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாமன்னன் படத்திலும் வில்லத்தனத்தில் தெறிக்க விட்டிருப்பார்.

Also Read: விஜய்க்கு அக்கட தேசத்திலிருந்து வந்த கோரிக்கை.. ரஜினியை குறித்து, நஷ்ட ஈடு கேட்ட அவலம்

அதே விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில், ரோலக்ஸ் ரோலில் நடித்த சூர்யா இப்படத்தில் கூடுதல் விமர்சனத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சூர்யா நாயகன் இல்லை என்றாலும், அவரின் நடிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்த நாயகனாக வேண்டிய ஆளு இவர்தான் என உலகநாயகன் சூர்யாவை புகழ்ந்தார்.

அதைத் தொடர்ந்து சிபாரிசு நடிகராய் தனக்கான திறமையைக் கொண்டு நடிப்பில் சாதிக்க வேண்டும் என வெறியோடு களம் இறங்கிய நடிகர் தான் துல்கர் சல்மான். தனக்கேற்ற கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வளரும் நடிகர்களுக்கு சப்போர்ட்டாக நடித்த விஜயகாந்தின் 5 படங்கள்.. சூர்யா கேரியருக்கு பக்கபலமாக இருந்த அண்ணா

Next Story

- Advertisement -