டிசம்பரில் உயிரை விட்ட 3 ஜாம்பவான்கள்.. கேப்டனின் பிரிவால் கதறும் தமிழகம்

3 celebrities died in December: வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் எதிர்பாராத விதமாய் மக்களை விட்டு மூன்று பிரபலங்கள் கோயின்சிடண்டாய் மரணித்துள்ளனர். அதிலும் இன்று அதிகாலை கேப்டனின் மறைவு செய்தி பலரையும் பதைபதைக்க வைத்தது. இப்போது இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு எல்லாம் அரசியலில் ஆர்வம் ஏற்படுகிறது என்றால், அது எம்ஜிஆரை பார்த்து தான். அவருக்கு கிடைத்த பேரும் புகழும் தமக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் அரசியல்வாதியாகிறார்கள்.

ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமாகி விடாது. குறிப்பிட்டு சொல்லக்கூடிய மூன்று பிரபலங்கள் சினிமாவிலும் அரசியலிலும் தனி ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றனர். அவர்கள் மூவருமே டிசம்பர் மாதத்தில் தான் உயிரிழந்தார்கள் என்பது பெரும் சோகம்.

ஏழை மக்களை அரவணைத்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1987 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் டிசம்பர் 24ஆம் தேதி உயிரிழந்தார். இவருடைய உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகில் வைக்கப்பட்டு, நினைவிடம் எழுப்பப்பட்டது.

Also Read: ஜெயலலிதா, விஜயகாந்த் நிலைமை உங்களுக்கு வேண்டாம்.. அஜித்துக்காக பிரேமம் இயக்குனர் போட்ட அதிர்ச்சி பதிவு

டிசம்பர் மாதத்தில் மரணம் அடைந்த 3 பிரபலங்கள்

அதிமுக கட்சியை நிறுவிய எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, கட்சிப் பிளவு ஏற்பட்டாலும் புரட்சித்தலைவர் விட்டுச் சென்ற பாதையை அடுத்ததாக வந்த ஜெயலலிதா சிறப்பாக வழி நடத்தினார். எல்லோராலும் அம்மா என்று அழைக்கப்பட்ட இவர், சினிமாவில் எம்ஜிஆர் உடன் ஜோடி போட்டு நடித்து பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர். அரசியல்வாதியாகவும் தமிழகத்தை நான்கு முறை முதலமைச்சர் ஆக ஆட்சி செய்த ஜெயலலிதா, திடீரென்று 2016ம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

இவர்களுடன் இப்போது தேமுதிக கட்சி தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி ஆன இன்று நுரையீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஆக மொத்தம் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய பெருந்தலைவர்கள் மூன்று பேரின் உயிரும் டிசம்பர் மாதத்தில் தான் போயிருக்கிறது. இவர்களின் இழப்பால் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் துயரத்தை தாங்க முடியாமல் அழுகின்றனர்.

Also Read: யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத 5 மரணங்கள்.. அரசியலை தாண்டி ஒரு கெட்ட பெயர் கூட வாங்காமல் மறைந்த கேப்டன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்