காப்பி அடித்தாலும் வசூலில் சோடை போகாத ஜவான்.. 2வது நாள் மொத்த வசூல் ரிப்போர்ட்

Jawan Collection Report: அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி இருக்கும் ஜவான் தமிழை பொறுத்தவரை நெகட்டிவான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ஏனென்றால் நாம் இங்கு அதிக அளவில் பார்த்த பல படங்களின் சாயல் அதில் இருக்கிறது.

இதனாலேயே தற்போது படத்தை பார்த்த ஆடியன்ஸ் தாறுமாறான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சினிமா விமர்சகர்கள் ஜவான் படத்தை பங்கம் செய்துள்ளனர்.

Also read: சமந்தாவின் காதல் காவியத்தை சுக்கு நூறாக்கிய ஜவான்.. முதல் நாள் என்ட்ரியிலேயே காலியான குஷி

இருந்தாலும் படத்தின் பிரம்மாண்டம், ஷாருக்கானின் மாஸ் கெட் அப் என்று பாலிவுட் ரசிகர்களை ஜவான் பெருமளவில் கவர்ந்துள்ளது. அதனாலேயே இப்போது படத்தின் வசூலும் ஏறுமுகமாக இருக்கிறது. அதன் படி ஜவான் முதல் நாளிலேயே ஹிந்தியில் 60 கோடியை தாண்டி வசூலித்திருந்தது.

அதேபோல் தமிழ், தெலுங்கிலும் நல்ல லாபம் கிடைத்திருந்தது. அந்த வகையில் முதல் நாளில் இந்திய அளவில் இப்படம் 73 கோடிகளை தட்டி தூக்கி இருந்தது. மேலும் உலக அளவில் 120 கோடி கலெக்சன் செய்திருந்தது.

Also read: எதையும் காதில் வாங்காமல் அட்லி ஆடும் ஆட்டம்.. சின்ன அண்ணன், பெரியண்ணன் ஆசிர்வாதத்தோடு அடிக்கும் மரண அடி

அதைத்தொடர்ந்து 2வது நாளில் உலக அளவில் 109 கோடிகளை ஜவான் தட்டி தூக்கி உள்ளது. ஆக மொத்தம் இரண்டு நாட்களிலேயே இப்படம் 229 கோடிகளை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது 200 கோடி கிளப்பில் இணைந்திருக்கும் ஜவான் விரைவில் 500 கோடிகளை தாண்டும் என்ற கருத்து கணிப்புகளும் எழுந்துள்ளது.

இவ்வாறாக அட்லி காப்பி அடித்து படத்தை எடுத்திருந்தாலும் வசூலில் சோடை போகவில்லை. அதனாலேயே இப்போது ஷாருக்கான் தலை தப்பிய நிலையில் இருக்கிறார். இந்த வசூல் இனிவரும் நாட்களிலும் எந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸை கலக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: ஜவான் படத்துக்கு அட்லி வாங்கிய சம்பளம்.. நெல்சன்,லோகேஷ்க்கு எல்லாம் வாத்தியாராய் மாறிய குட்டி தம்பி

Next Story

- Advertisement -