சமந்தாவின் காதல் காவியத்தை சுக்கு நூறாக்கிய ஜவான்.. முதல் நாள் என்ட்ரியிலேயே காலியான குஷி

Jawan – Kushi : இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி ஆகியோர் நடித்த ஜவான் படம் கடந்த ஏழாம் தேதி வெற்றிகரமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தாலும், படத்தின் வசூல் எல்லோரையும் ஆச்சரியத்தில் திளைக்க செய்யும் அளவில் கோடிக்கணக்காய் வாரி இருக்கிறது.

300 கோடி பட்ஜெட்டில் நடிகர் ஷாருக்கான் சொந்த தயாரிப்பில் தயாரித்த இந்த படத்தில் முதல் நாள் வசூல் 125 கோடி ஆகும். சமீபத்திய ரெக்கார்ட் பிரேக் ஆன ஜெயிலர் படத்தில் முதல் நாள் வசூல் சாதனையை இது முறியடித்துவிட்டது. வார இறுதி நாட்களில் இதன் வசூல் கண்டிப்பாக போட்ட பணத்தை மொத்தமாக எடுத்து விடும் அளவுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:உலக அளவில் ஓப்பனிங்கில் அதிர வைத்த 5 படங்கள்.. ஜெயிலரை மிஞ்சிய ஜவான்

குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாய், ஜவான் ரிலீசால் மொத்தமாக மண்ணை கவ்வி இருக்கிறது சமந்தா மற்றும் விஜய தேவர்கொண்டா நடித்த குஷி திரைப்படம். எந்த பெரிய தலைகளும் இல்லாத நேரத்தில் சோலோவாக வந்து ஸ்கோர் செய்துவிட்டு போக நினைத்த இவர்களுக்கு மொத்தமாய் ஆப்பு வைத்து விட்டார் ஷாருக்கான்.

குஷி படம் நல்ல ஒரு காதல் கதையாக ரசிகர்களின் மனதை கவர்ந்து இருந்தது. மேலும் சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டாவுக்கு இடையே கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. வழக்கமான காதல் மற்றும் ரொமாண்டிக் கதைகளத்தை மையமாக வைத்து வந்த இந்த படம், கதையில் கொஞ்சம் லேக் இருந்தாலும் தப்பித்தோம், பிழைத்தோம் என ரசிகர்கள் தியேட்டரில் வந்து பார்க்கும் அளவிற்கு ரெஸ்பான்ஸ் பெற்று வந்தது.

Also Read:இருக்கிறத விட்டுட்டு பறக்குது ஆசை பட்ட ராகவா லாரன்ஸ்.. 5 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் விழும் மரண அடி

படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்களில் சுமார் 70 கோடி வரை வசூல் செய்திருந்தது. விரைவில் குஷி படம் 100 கோடி கலெக்ஷன் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், சூறாவளி காற்று போல் சுழற்றி அடித்துவிட்டது ஷாருக்கானின் ஜவான் படம். கிட்டத்தட்ட 12 கோடி வரை இந்த இரண்டு நாட்களில் குஷி வசூல் செய்துவிடும் என கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஜவான் பட ரிலீசால் தென்னிந்திய ரசிகர்களின் கவனம் மொத்தமும் அந்த படத்தின் மீது போக, குஷி படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்கள் ஈ ஓட்ட ஆரம்பித்து விட்டன. இதனால் கிட்டத்தட்ட 12 கோடி வரை சரிவை சந்தித்திருக்கிறது இந்த படம். வார இறுதி நாட்கள் ஆன அடுத்த ரெண்டு நாட்களில் ஜவான் உடன் போட்டி போட்டு குஷி ஜெயித்ததா அல்லது மண்ணை கவ்வியதா என தெரிந்துவிடும்.

Also Read:நல்ல வேலை முந்திக்கிட்டு கேரியரை காப்பாற்றிய ஜெயம் ரவி.. தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ

- Advertisement -