சின்ன தூண்டில்ல மொத்த கஜானாவையும் ரொப்பிய 5 படங்கள்.. ஜம்முனு செட்டிலான அசோக் செல்வன்

List of hit debut directors and their hit films in 2023: சமூகத்தில் சாதாரணமாக நடக்கும் கதைகளை மையமாக வைத்து எந்த ஒரு பிரம்மாண்டமும் இல்லாமல் சிறந்த திரைக்கதை மூலம் போர் அடிக்காமல் விறுவிறுப்பாக நகர்த்தி ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வணிக ரீதியாக பட்டய கிளப்பிய படங்கள் இதோ.

2023 இல் வெளிவந்த படங்களில் இயக்குனரோ புதுசு! கதையோ பழசு! வசூலோ பெரிசு!                                    டாடா: ஊதாரித்தனமாக வாழும் இளைஞன் பொறுப்புணர்வு மிக்க சிங்கிள் தந்தையாக மாறிய நிகழ்வை அழுத்தத்துடன் பதிவு செய்துள்ளார் இயக்குனர் கணேஷ் பாபு. கவின் மற்றும் அபர்ணாதாஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 4 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் 20 கோடியை தாண்டியது.

போர் தொழில்:  அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளிவந்த கிரைம் திரில்லர் திரைப்படம் தான் போர் தொழில். கொலை செய்வதை கொஞ்சம் வித்தியாசமாகவும் கொலைக்கான காரணங்களை சமூக அக்கறையுடனும் நோக்கி  இறுதிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது இப்படம். 8 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் உலக அளவில் 50 கோடிக்கு மேலாக வசூலை வாரிக் குவித்தது.

Also Read: 2023 வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த 5 படங்கள்.. வாரிசு செய்த வசூல் இத்தனை கோடியா?

அயோத்தி:  மனிதநேயத்தை கருவாகக் கொண்டு  புதுமுக இயக்குனர் மந்திரமூர்த்தியின் இயக்கத்தில் சசிகுமார், புகழ், பிரியா அஸ்ராணி நடிப்பில் வெளிவந்த இப்படம் வசூலில் 50 கோடியை தாண்டி சாதனை செய்தது.  சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் அழுத்தமாக செதுக்கி முடிவில் அனைவரின் மனத்தையும் கணக்க செய்திருந்தார் இயக்குனர். சொல்ல வந்த கருத்தை தெளிவாக கூறி பரபரப்பான திரைக்கதையின் மூலம் வெளிப்படுத்திய இப்படத்தின் பட்ஜெட் 5 கோடி மட்டுமே.

குட் நைட்: விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த குட் நைட் படத்தின் பட்ஜெட் 3 கோடி இப்படம் உலக அளவில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படம் பார்க்கும் அனைவரும் தன் வீட்டில் உள்ள கதாபாத்திரத்தை திரையில் காண்பது போல் பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார் இயக்குனர். குறட்டை மட்டுமே படத்தின் மையக்கரு. நடுத்தர குடும்பத்தின் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும் கிண்டல், கேலியாகவும் அழகாக வெளிப்படுத்தி இருந்தனர்..

ஜோ: நீண்ட இடைவெளிக்கு பின் பிக்பாஸ் புகழ் ரியோராஜ் நடிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கிய படம் “ஜோ”. காதல், தோல்வி, திருமணம் இந்த மூன்றை படத்தின் கருவாகக் கொண்டு இளைஞர்கள் விரும்பும் படி கல்லூரி காலகட்டத்தை நகைச்சுவையோடு அமைத்து. இறுதியில் உணர்வுபூர்வமாக கதையோடு ஒன்ற வைத்திருக்கிறார் இயக்குனர்.

Also Read: இந்த ஆண்டு மாஸ் ஓபனிங் கொடுத்த 5 படங்கள்.. வாத்தி தனுஷை முந்தினாரா பத்து தல சிம்பு

- Advertisement -