CCL 2023 களமிறங்கும் 8 அணிகள், விறுவிறுப்பான 19 போட்டி.. சென்னை ரெயின்னோஸ் கேப்டன் யார் தெரியுமா.?

கிரிக்கெட்டும் சினிமாவும் இந்தியர்களின் வாழ்வில் வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் பிரிக்க முடியாத அளவிற்கு வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறி உள்ளது. அதிலும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் ஒன்று சேர்ந்து நட்சத்திர கிரிக்கட் லீக்கை கடந்த 2010 முதல் நடத்தி வருகின்றனர்.

முதலில் 4 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. பல்வேறு திரையுலகச் சேர்ந்த அனைத்து நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் காண முடியும் என்பதால் ரசிகர்களிடையே இந்த தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் 2023 CCL அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஒட்டுமொத்த டீம் கேப்டன்கள் லிஸ்ட் இடம்பெற்றுள்ளது.

Also Read: அதல பாதாளத்துக்கு தள்ளப்படும் இந்திய அணி.. 20 ஓவர் போட்டிகளுக்கு ஆப்பு அடிக்கும் ஹார்திக் பாண்டியா

போஜ்பூரி தபாங்ஸ் – கேப்டன் மனோஜ் திவாரி, கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் – கேப்டன் குஞ்சகோ போபன், சென்னை ரெயின்னோஸ் – கேப்டன் ஆர்யா, பெங்கால் டைகர்ஸ் – கேப்டன் ஜிஷு, கர்நாடகா புல்டோசர்ஸ் – கேப்டன் சுதீப், மும்பை ஹீரோஸ் – கேப்டன் ரிதேஷ் தேஷ்முக், தெலுங்கு வாரியர்ஸ் – கேப்டன் அகில் அக்கினேனி, பஞ்சாப் டி ஷேர் – கேப்டன் சோனு சூட் ஆகிய திரை நட்சத்திரங்கள் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும் பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கி மார்ச் 12ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் 4 லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளன. கடைசியில் புதுப்பட்டியில் முதல் 4 இடத்தை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அதன்பின் இரண்டு அரை இறுதிப் போட்டிகளும் ஹைதராபாத்தில் நடைபெறும்.

Also Read: இந்திய அணியின் கதவை தட்டும் மற்றும் ஒரு வீரர்.. 5வது கீப்பரால் ட்ராவிட்டுக்கு வந்த தலைவலி

இதில் வெற்றி பெறும் அணிகள் ஹைதராபாத்தில் மார்ச் 19 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. மேலும் சென்னை ரெயின்னோஸ்  18.02.2023 அன்று மும்பை ஹீரோஸ் உடன் மோதுகிறது. அதைத்தொடர்ந்து சென்னை ரெயின்னோஸ் 25.02.2023 அன்று போஜ்பூரி தபாங்ஸ் உடனும், 04.03.2023 அன்று கர்நாடகா புல்டோசர்ஸ் உடனும், 12.03.2023 அன்று தெலுங்கு வாரியர்ஸ் உடனும் சென்னை ரெயின்னோஸ் மோத உள்ளது.

இதற்கு முன்பு சென்னை ரெயின்னோஸ்ஸ் அணியின் கேப்டனாக சரத்குமார், விஷால், ஜீவா இவர்களைத் தொடர்ந்து தற்போது கேப்டன் பொறுப்பில் நடிகர் ஆர்யா பதவியை ஏற்றுக்கொண்டார். இவருடைய தலைமையில் சென்னை ரெயின்னோஸ் அணி எப்படி செயல்பட போகிறது என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: லியோ படத்தில் விஷால் இல்லாதது நல்லது தான்.. தயாரிப்பாளர் கூறிய பதிலை கேட்டு ஷாக்கான லோகேஷ்.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்