மாவீரன் படத்தை தூக்கி நிறுத்திய 2 நபர்கள்.. சிவகார்த்திகேயன் எல்லாம் அப்புறம் தான்

Maaveeran: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று மாவீரன் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. காலை முதலே இந்த படத்திற்கு ரசிகர்கள் உள்ள வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். மேலும் இயக்குனர் மடோன் அஸ்வின் சிறந்த கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

முதல் பாதி சற்று விறுவிறுப்பாக சென்ற நிலையில் இரண்டாம் பாதியில் மற்றும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும் அதை சுவாரசியமாக ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்ததில் இரண்டு நபர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மாவீரன் படத்தையே அவர்கள் தான் தூக்கி நிறுத்தி உள்ளனர்.

Also Read : Maaveeran Movie Review- உரிமைக்கு போராடும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

மேலும் அவர்களுக்குப் பிறகுதான் சிவகார்த்திகேயன் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. அதாவது இயக்குனராக பட்டையை கிளப்பி வந்த மிஷ்கின் இந்த படத்தில் அரசியல்வாதியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்கத்தை காட்டிலும் அவரது நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது.

ஒரு அரசியல்வாதி எந்த தோரணியில் இருப்பாரோ அதை பிரதிபலிக்கும் விதமாக மிஷ்கின் கதாபாத்திரம் இருந்தது. ரசிகர்கள் பலரும் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டி இருக்கிறார்கள். அடுத்ததாக மாவீரன் படத்திற்கு முக்கிய தூணாக அமைந்தது யோகி பாபுவின் காமெடிதான்.

Also Read : சிவகார்த்திகேயனின் மாவீரன் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

சமீபகாலமாக யோகி பாபுவின் படங்களில் காமெடி வெற்றிடமாக இருக்கிறது என்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் மாவீரன் படம் முழுக்க ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். மேலும் அவர் எதுவும் பேசவில்லை என்றாலும் ஸ்கிரீனில் வந்து நின்றாலே சிரிப்பு வந்து விடுகிறது.

அந்த அளவுக்கு ரியாக்ஷன் கொடுத்து ரசிகர்களை சிரிப்பில் மூழ்கடித்திருக்கிறார் யோகி பாபு. இந்த படத்தில் சிவகார்த்திகேயனை காட்டிலும் கூடுதலாக மிஷ்கின் மற்றும் யோகி பாபு தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் மிஷ்கின் இனி நடிகராக பல படங்களில் அவதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டாரு.. மாவீரன் படத்தால் நொந்து போன இயக்குனர்

Next Story

- Advertisement -