கோலி, ரோஹித் இடத்தை நிரப்ப வந்த 2 பேர்.. ஜடேஜா இடத்துக்கு வந்த ஏழடி வேங்கை

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த பின் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து விட்டனர். அவர்களைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கௌரவமாக தன் ஓய்வு முடிவை தெரிவித்துவிட்டார்.

36 வயதில் ரோகித் சர்மாவும், விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் 35 வயதிலும் இந்த முடிவை எடுத்துள்ளனர். அடுத்து வரும் இளம் வீரர்களுக்கு வழிவகுக்கும் வகையில் இவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். ஏற்கனவே திறமையான வீரர்கள் பல பேர் காத்திருக்கையில் இவர்களின் இந்த முடிவு பலபேருடைய பாராட்டை பெற்று வருகிறது.

எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், அபிஷேக் ஷர்மா, என போன்ற வீரர்கள், மூத்த வீரர்கள் விளையாடி வருவதால் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்து வருகின்றனர். இவர்களது இந்த ஓய்வு முடிவு அவர்கள் அணிக்குள் வருவதற்கு வழிவகுக்கும். ரோகித், ஜடேஜா, விராட் கோலி மூவரும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

ஜடேஜா இடத்துக்கு வந்த ஆறடி வேங்கை

ரோஹித்தின் இடத்தை எஸ் எஸ் வி ஜெய்ஸ்வாலும், விராட் கோலியின் இடத்தை சுபம் கில்லும் இனி வரும் காலகட்டங்களில் இந்திய அணியில் நிரப்புவார்கள் என தெரிகிறது, அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில், அனுபவம் மற்றும் திறமை இரண்டிலும் மேலோங்கி விளங்குவார்கள்.

இளம் வீரர் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். ஐபிஎல் இல் அவர் ஆடிய விதம் வருங்கால இந்திய அணிக்கு ஒரு தூண் போல் இருப்பார் என்பது தெரிகிறது. ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் ஓய்வு முடிவு நமக்கு பேரறிச்சியை கொடுத்தாலும். இந்திய அணியில் அவர் இடத்தை நிரப்புவது கடினம் தான்.

பௌலிங், அதிரடி ஆட்டம், அட்டகாசமான பில்டிங் என மூன்றிலும் சிறந்து விளங்கிய ஜடஜாவின் இடத்தை நிரப்பக்கூடிய அனைத்து அம்சமும் ஏழடி வேங்கை போல் செயல்படும் சிவம் டுபேவால் மட்டும் தான் முடியும். ஜடேஜாவின் இடத்தில் சிறப்பான பங்களிப்பை இவரால் மட்டும் தான் கொடுக்க முடியும்.

Next Story

- Advertisement -