விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு இடையே ஏதோ ப்ரோமான்ஸ்சாம்.. அது என்ன கருமம் என்று குழம்பிய ரசிகர்கள்

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்யப்போவதாக பிசிசிஐக்கு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அவரின் இந்த ராஜினாமா கடிதத்திற்கு பல காரணங்களை கூறிவருகின்றனர்.

பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான கடந்த போட்டியில் பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை தோற்கடித்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் விளையாடிக் கொண்டிருக்கும் போது, இஷான் கிஷான் நேராக அடித்த பந்து ரோகித் சர்மாவை நோக்கி சென்றது. தனது முகத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக கைகளை தூக்கி மூடினார் ரோகித், அதனால் பந்து அவரின் கைகளை பலமாகத் தாக்கியது.

Rohit-Injured-Cinemapettai.jpg
Rohit-Injured-Cinemapettai.jpg

போட்டி முடிந்த பின்னர் கைகளில் கட்டுப் போட்டுக்கொண்டிருந்த ரோகித் சர்மாவை சந்திக்க மும்பை இந்தியன்ஸ் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றார் விராட் கோலி. அங்கே இருவரும் சகஜமாக சிரித்துப் பேசிக் கொண்டனர். இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Rohit-Kholi1-Cinemapettai.jpg
Rohit-Kholi1-Cinemapettai.jpg

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்குள் நடந்த இந்த சந்திப்பை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஆணும், பெண்ணும் ரொமான்ஸ் செய்வது போல்,  இது ஆணும், ஆணும் செய்யும் ப்ரோமான்ஸ் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.