பிப்ரவரி இறுதி வாரத்தில் ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் 13 படங்கள்.. சிக்ஸர் அடிக்க வரும் ப்ளூ ஸ்டார் எதுல தெரியுமா?

February Last Week OTT, Theatre Release Movies : இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் நிறைய படங்கள் வெளியாகிறது. சினிமா பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த படங்கள் வெளியாக உள்ளதால் அவை என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கடந்த மாதம் ப்ளூ ஸ்டார் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. கடந்த ஆண்டு வெளியான புவர் திங்ஸ் படம் ஆஸ்கர் போட்டியில் ஏழு பிரிவுகளின் நாமினேட் ஆகியிருந்தது.

இந்த படம் வருகின்ற நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 27 வெளியாகிறது. மேலும் கொரியன் மொழியில் உருவான தி இம்பாசிபிள் ஹெயர் வெப் சீரிஸ் பிப்ரவரி 28 ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. பிரிசில்லா வெப் சீரிஸ் முபி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Also Read : ஓடிடி என்ட்ரியில் பல்பு வாங்கிய 5 நடிகைகள்.. வெப் சீரிஸ் நடித்து மொக்கை வாங்கியது தான் மிச்சம்

எனி ஒன் பட் யூ என்ற படம் பிப்ரவரி 27ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்கு அடுத்தபடியாக மாம்லா லீக் ஹை நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் 1ஆம் தேதி வெளியாகிறது. வெள்ளிக்கிழமை மார்ச் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் 5 படம் வெளியாகிறது.

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் மிரட்டலான நடிப்பில் உருவாகி இருக்கிறது போர் படம். இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் திரையரங்குகளில் மார்ச் ஒன்று வெளியாகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நடிப்பில் உருவாகி உள்ள ஜோசுவா இமை போல் காக்க படமும் ரிலீஸ் ஆகிறது. மேலும் அதோமுகம், சத்தமின்றி முத்தம்தா மற்றும் தோழர் சேகுவேரா போன்ற படங்களும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read : டாம் அண்ட் ஜெரியாக மோதும் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்.. கெட்ட வார்த்தைகளால் தெறிக்க விட்ட போர் ட்ரெய்லர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்