ஓடிடி என்ட்ரியில் பல்பு வாங்கிய 5 நடிகைகள்.. வெப் சீரிஸ் நடித்து மொக்கை வாங்கியது தான் மிச்சம்

Web Series: சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் ஒரு சில நடிகைகள் அப்படியே ஓடிடி பக்கம் கரை ஒதுங்கி விடுகிறார்கள். இந்த வெப் சீரிஸ் கலாச்சாரம் எல்லாம் ஒரு சில நடிகைகளுக்குத்தான் பொருத்தமாக இருக்கிறது. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக திடீரென வெப் சீரிஸ் நடிக்கிறேன் என்ற பெயரில் உள்ளே வந்த இந்த ஐந்து நடிகைகள் பயங்கர மொக்கை வாங்கிக் கொண்டுதான் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

பல்பு வாங்கிய 5 நடிகைகள்

காஜல் அகர்வால்: விஜய் மற்றும் அஜித்தின் படங்களில் அடுத்தடுத்து நடித்து டாப் ஹீரோயினாக இருந்த காஜல் அகர்வால் கமலின் இந்தியன் டு படத்தின் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென கிடப்பில் போடப்பட்டதால் அந்த சமயத்தில் அவர் தேர்ந்தெடுத்த வெப் சீரிஸ் தான் லைவ் டெலிகாஸ்ட். இந்த சீரிஸை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். நல்ல திகில் களமாக இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஹன்சிகா: நடிகை ஹன்சிகா உடல் எடையை குறைத்த பிறகு பட வாய்ப்பு என்பது அவருக்கு குதிரை கொம்பாக மாறிவிட்டது. இதனால் வெப்சீரிஸில் நடிக்கலாம் என முடிவெடுத்தவர் மை3 எனும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்தார். பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் சிவா மனசுல சக்தி போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராஜேஷ் தான் இதை இயக்கியிருந்தார். இருந்தாலும் இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

Also Read:பேய் படம் பிடிச்சவங்க பார்க்க வேண்டிய 5 மலையாள மூவிஸ்.. திகிலின் உச்சிக்கு கொண்டு போகும் ரோமன்ஜம்

வரலக்ஷ்மி சரத்குமார்: வரலட்சுமி சரத்குமாருக்கு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் ஆசை யாரை விட்டது என்ற கதையாக வெப்சீரிஸில் நடிப்பதற்கு ஆசைப்பட்டு அவர் நடித்த கதைதான் மேன்ஷன் 24. சத்யராஜ் மற்றும் பிந்து மாதவியும் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். படத்தின் திரைக்கதை மக்கள் எதிர்பார்த்த அளவே இல்லாததால் படம் வரவேற்பை பெறவில்லை.

ஸ்ருதி ஹாசன்: நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அவர் எடுக்கும் எந்த ஒரு புது முயற்சிகளும் சமீபத்தில் கை கொடுக்காமல் இருக்கிறது. திரைப்படங்களில் தான் தோல்வி என்று பார்த்தால் வெப் சீரிஸ் கூட சொதப்பிவிட்டது. அவர் நடித்த பெஸ்ட் செல்லர் என்னும் வெப் சீரிஸ் வந்த தடம் தெரியாமல் போய்விட்டது. அதை தொடர்ந்து ஒன்று இரண்டு வலைத்தொடர்களில் இவர் நடித்திருந்தாலும் எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கான வெற்றியை பெறவில்லை.

அக்ஷரா ஹாசன்: அக்கா ஸ்ருதிஹாசனை போலவே தங்கை அக்ஷரா ஹாசனுக்கும் படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிசும் கை கொடுக்கவில்லை. அவருடைய நடிப்பில் ரிலீஸ் ஆன அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற வெப்சீரிஸ் ட்ரெய்லர் வெளியான போது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் ஆன பிறகு திரைக்கதை மக்கள் மனதில் ஒட்டவில்லை. இதனால் இந்த தொடர் பெரிய அளவில் பிளாப்பானது.

Also Read:யோசிக்காம நடிச்சு தொலைச்சுட்டேன், இப்ப வாழ்க்கை போச்சுன்னு புலம்பும் 5 நடிகைகள்.. வில்லியாக சோலி முடிந்த சிம்ரன்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்