டாம் அண்ட் ஜெரியாக மோதும் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்.. கெட்ட வார்த்தைகளால் தெறிக்க விட்ட போர் ட்ரெய்லர்

Por Trailer : டேவிட் படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள போர் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கும் இருக்கும் போட்டியை வைத்து போர் படத்தை எடுத்து இருக்கின்றனர்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான அநீதி படம் வரவேற்பை பெற்றது. அதேபோல் காளிதாஸ் ஜெயராமன் இப்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்து கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி இருந்தது.

காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவருமே டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் டாம் அண்ட் ஜெரியாக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனையால் என்னென்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மையக்கதை.

Also Read : மௌனகுரு இயக்குனரின் அடுத்த படைப்பு ரசவாதி, வைரல் டீசர்.. சைக்கோவாக மிரட்டும் அர்ஜுன் தாஸ்

எப்போதுமே டெரரான கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸையே ஓவர்டேக் செய்து இருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். ஏனென்றால் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு ட்ரெய்லரிலேயே எக்கச்சக்க கெட்ட வார்த்தைகள் இடம் பெற்று இருக்கிறது. சென்சார் போர்டு எப்படி இதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்று தான் யோசிக்க வைக்கிறது.

இப்போது உள்ள இளைஞர்களை கவருவதற்காக இதுபோன்ற மோசமான யுக்தியை கையாண்டு இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையை மோசமான பாதைக்கு அழைத்துச் செல்லும்படி இவ்வாறு சில படங்கள் வரத் தான் செய்கிறது. மேலும் இந்த ட்ரைலரை பார்க்கும்போது ஒளிப்பதிவு மட்டும் பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்