ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

முளைகட்டிய தானியங்களில் இருக்கும் 10 மருத்துவ பயன்கள்.. அற்புத உணவை விட்டுவிட்டு ஏன் ஆஸ்பத்திரிக்கு போகணும்?

Healthy Food: நம்ம தாத்தா பாட்டி காலத்தில் சாப்பிட்ட உணவுகள் ஆரோக்கியமாகவும் சத்தானதாகவும் இருந்ததால்தான் அவர்களால் யார் தயவும் இல்லாமல் மருந்து மாத்திரை பக்கமும் போகாமல் வாழ்ந்து வந்தார்கள். அதுவே நம்முடைய அம்மாக்கள் காலத்தில் பாரம்பரியமான உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போக ஆரம்பித்தது.

அதனால் சென்ற தலைமுறைினர் நெல்லு சோறுக்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு பண்டிகை நாளை காத்துக்கொண்டு அரிசி உணவை சாப்பிடுவதற்காக ஆசைப்பட்டு வந்தார்கள். ஆனால் அதுவே போகப் போக அன்றாட உணவாக மாறிவிட்டது. அதோட சேர்ந்து நோயும் நொடியும் உடம்போடு ஒட்டிக்கொண்டது.

ருசியை விட ஆரோக்கியமான உணவே சிறந்தது

தற்போது இதெல்லாம் தவிர்த்து வந்தால் நல்லது அந்த காலத்து உணவே சிறந்தது என்று சொல்வதற்கு ஏற்ப மக்கள், தாத்தா பாட்டி காலத்தில் உள்ள பாரம்பரியமான சத்தான உணவுகளை தேடி தேடி அலைந்து வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் எளிதில் கிடைக்கக்கூடிய தானியங்களை வைத்து அற்புத உணவாக சாப்பிட்டு ஆஸ்பத்திரிக்கே போகாமல் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மருத்துவ விஷயங்களும் இருக்கிறது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

முளைகட்டிய தானிய பயிர்கள்: பச்சைப் பயிர், கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, கொள்ளு மற்றும் கருப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைகட்டிய தானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும். தானியங்களை நன்றாக கழுவி 8மணி நேரம் ஊறவைத்து ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்துவிட்டால் பத்து மணி நேரத்தில் தானியம் முளைவிட்டிருக்கும்.

முளைவிட்ட பச்சை பயறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் கட்டுப்பாடாகும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும். முளைகட்டிய கொண்டைக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிட்டால் சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

முளைவிட்ட கருப்பு உளுந்து தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். மூட்டு வலி தீரும். எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தி அதிகம், இந்த முளைவிட்ட தானியங்களுக்கு உண்டு.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும். வைட்டமின் ஏ நிறைந்த தானியங்கள் கண்களுக்கு குளிர்ச்சியை தந்து பார்வை திறனை அதிகரிக்கும். அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் ஹார்மோன்கள் சீராக சுரக்க வழிவகுக்கும். அத்துடன் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொடுக்கும்.

முளைகட்டிய பயிர்களில் உள்ள வைட்டமின் பி மென்மையான சருமத்தை தரும். தோல் புற்றுநோயை தடுக்கும் சரும புத்துணர்வு கொடுக்கும். அத்துடன் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும்.

ஆனால் செரிமான பிரச்சனை இருப்பவர்கள் முளைக்கட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடுவதை விட லேசாக வேகவைத்து சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது. அத்துடன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

இப்படி வீட்டில் இருக்கும் தானியங்களை முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்பட வைத்துக் கொள்ளலாம். இதை விட்டுவிட்டு ஏன் நோய் நொடி என்று மருந்து மாத்திரை தேடி ஆஸ்பத்திரிக்கு போகணும். அதனால் முடிந்தவரை ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நிறைவான வாழ்க்கையை வாழலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு சில டிப்ஸ்கள்

- Advertisement -

Trending News