This tea at night instead of milk: ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்க்கை முறையும், நாம் வாழும் சூழலும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப உணவு முறைகளும் மாறிக் கொண்டு வருகிறது. உடனே நாமும் அதை சாப்பிட்டு பார்ப்போம், இதுதான் நல்லது என்று நம்பிக் கொண்டு அதன் படியே நம் சாப்பிட்டு நடைமுறைப்படுத்துகிறோம்.
ஆனால் திடீரென்று இதெல்லாம் கெடுதல் நம் அந்த காலத்தில் சாப்பிட்ட உணவுகள் தான் சிறந்தது என்று அது மறுபடியும் தேடிப் போய் சாப்பிடும் அளவிற்கு மகத்துவமான உணவாக இருக்கிறது.
அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் மகத்துவம்
அதற்கு பேசாமல் யார் என்ன சொன்னாலும் நம்பிடாமல் எது நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்தார்களோ, எது நம்மிடம் எளிதில் கிடைக்குமோ அதை வைத்து சாப்பிட்டு உடம்பை தென்பா வைத்துக் கொண்டாலே நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அந்த வகையில் நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டிக்குள் இருக்கும் பொருட்களை வைத்து நம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி படி ஊர்ஜிதமாய் இருக்கிறது.
அதாவது சீரகம் இல்லா உணவும் சிறு குழந்தைகள் இல்லாத வீடும் சிறக்காது. எட்டு மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம், போன்ற பழமொழிகள் வெறும் சொல்லுக்காக சொல்லப்பட்டது அல்ல. அதில் அத்தனை மகத்துவங்கள் இருக்கிறது. அஞ்சறைப் பெட்டியின் அருமையை நாம் உணர்ந்து கொண்டால் மருத்துவமனையும் மருந்துகளையும் ஓரமாக வைத்துக் கொள்ளலாம்.
அதாவது ஒருநாள் முழுவதும் சாப்பாடுகளை சாப்பிட்டு நாம் தூங்குவதற்கு முன் பால் குடித்தால் தான் தூக்கம் வரும் என்பதற்கு ஏற்ப மனசு மாறிவிட்டது. ஆனால் அந்தப் பாலை நிப்பாட்டி விட்டு அதற்குப் பதிலாக ஒரு தேநீரை குடித்தால் போதும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வாக சக்தி வாய்ந்ததாக மாறிவிடும்.
அந்த வகையில் நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை, பெண்களுக்கு ஏற்படும் எலும்பு பிரச்சனை, வயதான காலங்களில் ஹார்மோன் சிறப்பு குறைவது எல்லாத்துக்கும் சிறந்தது இந்த ஒரு தேநீர் போதும். கொத்தமல்லி விதையில் உள்ள பண்புகள் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும். மேலும் இது வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தின் அளவை குறைத்து எரியும் உணர்வு மற்றும் வலியையும் குறைக்கிறது.
மேலும் சீரகத்தில் இயற்கையான கார்மினேடிவ் மற்றும் செரிமான முகவுகளாக செயல்படும் கலவைகள் இருக்கிறது. இது அஜீரணம் மற்றும் வாய்வு காரணமாக ஏற்படும் அமில தன்மையை போக்க ரொம்பவே உதவுகிறது. அத்துடன் சோம்பு செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. இது வயிற்றை விரைவில் சுத்தமாக்கி மலச்சிக்கல் பிரச்சனையை எளிதில் நீக்குகிறது.
அந்த வகையில் ஒரு டம்ளர் தண்ணி ஊற்றி ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி போட்டு கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி இதை தினமும் தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை, குடல் புண் பிரச்சனை, வாய்வு தொல்லை மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்கிவிடும்.
உடல் சுறுசுறுப்பாக வைத்திருக்க சில டிப்ஸ்கள்
- ABC பவுடரை வீட்டில் எளிதாக பண்ணுவது எப்படி
- வாழைப்பூவில் இருக்கும் மருத்துவ பயன்கள்
- சர்க்கரை நோய்க்கு சங்கு ஊதும் கொய்யா இலை