5 healthy millet rice’s: ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் வாழ்வதற்காக சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்பொழுது டேஸ்ட்காக வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். இதனால் எந்த அளவிற்கு அவஸ்தை படுகிறோம் என்பதை புதுப்புது நோயால் பாதிக்கப்படும்போது தெரிகிறது.
அதனால் தற்போது பழையபடி அந்தக் காலத்து உணவை தேடி சாப்பிடும் அளவிற்கு ஒவ்வொருவரும் போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நமது நலம் காக்கும் ஐந்து நவதானிய அரிசிகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிக பயனுள்ளதாக அமைகிறது. அது என்னென்ன எப்படி எல்லாம் சாப்பிடலாம் என்று ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகள் போதும்
குதிரைவாலி அரிசி: நம் முன்னோர்களின் உணவில் முக்கிய இடம் பிடித்தது குதிரைவாலி. இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், தாது பொருட்கள் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் குதிரைவாலி சாப்பிட்டால் குதிரை பலத்தை பெறுவார்கள் என்று ஒரு சொலவடை உண்டு. இதை வடை அல்லது தோசையாகவோ செய்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக் கொள்வதற்கு தயிர் அல்லது சட்னி பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அத்துடன் இந்த அரிசியில் புலாவ் மாதிரி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் இந்த அரிசியை மாவு மாதிரி அரைத்து ஊத்தப்பம், இட்லி செய்து சாப்பிடலாம். அந்த அளவிற்கு ஊட்டச்சத்து பொருட்கள் அதிகம் இருக்கிறது.
சாமை அரிசி: இந்த அரிசியில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த உணவை எடுத்துக் கொண்டால் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால் செரிமானத்தை மெதுவாக்கி இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவியாக இருக்கிறது. அதனால் தான் சாமை அரிசி சாப்பிட்டால் ஆமை வயது போல் இருப்பார்கள் என்று ஒரு பழமொழி உண்டு.
வரகு அரிசி: இந்த வரகு அரிசியில் மாவுசத்து போன்ற டிரைகிளிசரைடு குறைவாக இருப்பதால் இதயத்துக்கு ரொம்பவே வலிமை கொடுக்கக் கூடிய சக்தி இந்த வரகு அரிசிக்கு இருக்கிறது. மூளையின் செல்கள் சுறுசுறுப்பாகவும், தசைகள், எலும்புகள், பல்கள் போன்றவை காக்கும் அமினோ அமிலங்கள் இதில் அதிகமாக இருக்கிறது. அந்த அளவிற்கு இதில் புரதச்சத்து கூடிய வலிமையை கொடுக்கிறது. அதனால் தான் வரகு அரிசி சாப்பிட்டால் வருங்காலத்தை பார்க்கலாம் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மாப்பிள்ளை சம்பா: இந்தப் பெயருக்கு ஏற்றார் போல் திருமணத்திற்கு தயாராகும் ஆண்களோ அல்லது திருமணமான மாப்பிள்ளைகளோ இந்த உணவை சாப்பிட்டால் அதிக அளவில் சக்தியை கொடுக்கும் என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு விஷயம். அதிலும் இளவட்ட கல்லை தூக்கினால் தான் பொண்ணு கொடுப்பார்கள் என்று ஒரு காலத்தில் இருந்த பொழுது தொடர்ந்து மூன்று மாதம் இந்த சாப்பாட்டை கொடுத்து அவர்களை சக்தியாக கொண்டு வந்து கல்லை தூக்கி பிறகு கல்யாணம் நடக்கும் என்பது அந்த காலத்து ஐதீகம்.
கருப்பு கவுனி: அந்த காலத்தில் ராஜாக்கள் மட்டுமே சாப்பிட்டு வந்த உணவுதான் கருப்புக் கவனி. ஏனென்றால் இந்த உணவை சாப்பிட்டவர்கள் கேன்சர் என்ற நோய்க்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். இந்த உணவின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்து நீடூடி வாழ்வதற்கு தகுந்த ஆரோக்கியமாக கருதப்படுகிறது.
அதனால் தான் சைனாவில் இந்த உணவை தடை பண்ணி இருக்கிறார்கள். ஏனென்றால் இதை அதிகமாக சாப்பிட்டு முதியவர்கள் 130 வயது வரை வாழ்கிறார்களாம். இதனால் வயதானவர்கள் அதிகமாக இருப்பதால் இதை சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு கருப்பு கவுனி ஆரோக்கியமாக இருப்பதற்கும் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் தகுந்த உணவாக பார்க்கப்படுகிறது.
அதனால் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் முடிந்த வரை இந்த உணவு பழக்கங்களை கொண்டு வந்து குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தி வருங்கால சந்ததிகளை நலமுடன் வாழ வைக்க முயற்சி எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒரு முறையாவது இந்த உணவுகளை உடம்பில் சேர்க்க வேண்டும்.
ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகள்
- ABC பவுடரை வீட்டில் எளிதாக பண்ணுவது எப்படி
- 6 ரூபாய் செலவில் அதிக ஆரோக்கியம்
- டெய்லி தின்ற பானிபூரில இவ்வளவு பிரச்சனையா