சன் மற்றும் விஜய் டிவியை ஓரம்கட்டிய ஜீ-தமிழ்.. டாப் சீரியல் லிஸ்ட்ல யாருன்னு பாருங்க.!

தற்பொழுது பெரும்பாலான மக்கள் சினிமா படங்களைப் பார்ப்பதை காட்டிலும் சீரியல்களை பார்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கே சீரியல்கள்தான். இதனை அறிந்த பல சேனல்கள் போட்டி போட்டு ரசிகர்களின் சீரியல் பசிக்கு தீனி போடும் வகையில் புதிய புதிய கதைக்களத்துடன் சீரியல்களை களமிறக்குகின்றனர் அதில் வெற்றியும் காண்கின்றனர்.

அப்படிப்பட்ட விதமாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடும் ஜீ தமிழின் சீரியல்தான் கோகுலத்தில் சீதை என்னும் வெற்றி தொடர். ஜீ தமிழில் தற்போது வரை டிஆர்பி ரேட்டிங்கின் முதலிடத்திற்காக செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சத்யா, போன்ற சீரியல்கள் போட்டியிட்டு வருகின்றது.

இந்த நிலையில் திடீரென இவற்றை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்கு வந்து சாதனை படைத்தது கோகுலத்தில் சீதை நெடுந்தொடர். இது ஒரு காதலை மையமாகக் கொண்ட சீரியலாகும். இதில் அறிமுக நாயகியாக கன்னட நடிகை ஆஷா கௌடாவும், அறிமுக நாயகனாக பிரபல டான்ஸ் மாஸ்டர் நந்தாவும், வில்லத்தனத்தை தந்திரமாக வெளிப்படுத்தி உள்ளனர்.

நம்ம ஓல்ட் ஹீரோயின் நளினியும் மற்றும் பல முக்கிய பிரபலங்களும் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்புகின்றனர். இந்த சீரியலின் முக்கிய கருத்து ஒரு நடுத்தர வீட்டு குடும்பப்பாங்கான பெண் ஒரு பணக்கார வீட்டுப் பிளேபாய் பையனை திருத்தி காதலித்து திருமணம் செய்வதுதான்.

பல தடைகளைத் தாண்டி கதாநாயகன் அர்ஜுனுக்கும், கதாநாயகி வசுந்தரா விற்கும் வெற்றிகரமாக திருமணம் முடிந்து சீரியல் ஒரு காதல் கதையில் மூழ்கி ரசிகர்களை கிறங்கடித்து டிஆர்பி-ல் நம்பர் ஒன் ரேட்டிங் பெற்று சாதனைப் பயணத்தை தொடர்கிறது. மேலும் இந்த சீரியல் தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது மற்ற சீரியல்களுக்கு விட்டுக்கொடுக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ks-serial-cinemapettai
ks-serial-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்