கொம்பர்களுக்கு தலைவரான விக்ராந்த்.. அசுர பலத்துடன் அர்ஜுன் கொடுத்த பவர்

நாளை தீபாவளி என்பதால் எல்லா தொலைக்காட்சிகளும் பல நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்கள், பட்டிமன்றங்கள் என கொண்டாட்டத்தில் உள்ளார்கள். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் விருந்து, ஆட்டம், பாட்டம் என சர்வைவர் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.

சர்வைவர் அரங்கம் முழுவதும் சிரிப்பலை சூழ்ந்திருந்தது. காடர்கள், வேடர்கள் என இரு அணிகளாக இருந்த சர்வைவர் போட்டியாளர்கள் தற்போது கொம்பர்கள் என ஒரே அணியாக உள்ளார்கள். இதனால் நேற்று தலைவர் போட்டி நடத்தப்பட்டது.

அதில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, விக்ராந்த், நாராயணன் ஆகிய நான்கு பேரை தலைவர் போட்டியாளர்களுக்கு தேர்ந்தெடுத்து போட்டிகள் நடத்தப்பட்டது. விஜயலட்சுமி, ஐஸ்வர்யா மற்றும் நாராயணன், விக்ராந்த் என இரு ஜோடிகளாக போட்டிகள் நடத்தப்பட்டு ஐஸ்வர்யாவும், விக்ராந்த் வெற்றி பெற்றார்கள்.

இவர்கள் இருவருக்கும் நடத்தப்பட்ட போட்டியில் விக்ராந்த் வெற்றி பெற்று தலைவர் பொறுப்பை ஏற்றார். இதில் விக்ராந்துக்கு ஒரு இம்முநிடி பவர் கிடைத்தது. இந்த வார ரைபிள் பஞ்சாயத்தில் ஒருவர் ஓட்டை பிளாக் செய்யலாம்.

விக்ராந்த் யார் ஓட்டை பிளாக் செய்வார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றைய எபிசோடு பல சுவாரஸ்யங்கள் உடன் கூடிய நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. இன்று எபிசோடை பார்க்க சர்வைவல் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

survivor-show
survivor-show
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்