ஜீ தமிழின் 2 கதாநாயகிகளை தட்டி தூக்கி விஜய் டிவி.. ராதிகா, எஸ்ஏசி இணைந்த புது சீரியலின் டைட்டில்

பிரபல தனியார் தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற மூன்று சேனல்களுக்கு இடையே டிஆர்பி-யில் கடும் போட்டி நிலவும். இதனால் இவர்கள் ரசிகர்கள், விரும்பும் கதைக்களத்தில் புத்தம் புது சீரியலை அடுத்தடுத்து போட்டி போட்டுக் கொண்டு துவங்குகின்றனர்.

அந்த வகையில் இப்போது விஜய் டிவி மற்ற சேனல்களுக்கு எல்லாம் தண்ணி காட்டும் அளவுக்கு டாப் பிரபலங்களை ஒரே சீரியலில் இணைத்து மாஸ் காட்டி உள்ளது. பிரபல இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர், ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து புதிய சீரியலில் நடிக்கின்றனர் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

Also Read: குக் வித் கோமாளி சீசன் 4ல் இரண்டாவது எலிமினேஷன் யார் தெரியுமா.? யாரும் எதிர்பாராத அதிரடி ட்விஸ்ட்

ஆனால் இந்த சீரியலில் இன்னும் 2 கதாநாயகிகள் இணைந்திருப்பது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது. விஜய் டிவி, ஜீ தமிழின் 2 கதாநாயகிகளை தட்டி தூக்கி உள்ளது. சமீபத்தில் ஜீ தமிழில் நிறைவடைந்த பூவே பூச்சூடவா என்று சீரியலின் கதாநாயகி ரேஷ்மா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலின் ஹீரோயின் அஸ்வினி இருவரும் இணைந்து விஜய் டிவியின் புத்தம் புது சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.

இந்த சீரியலுக்கு ‘கிழக்கு வாசல்’ என்று டைட்டில் வைத்திருக்கின்றனர். நிச்சயம் இந்த சீரியலை விஜய் டிவி பிரைம் டைமில் ஒளிபரப்பாக்கும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை. ஏனென்றால் ராதிகா, எஸ்ஏசி, ரேஷ்மா, அஸ்வினி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்திருக்கும், இந்த சீரியல் நிச்சயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும்.

Also Read: உடல் மெலிந்து கிக்கான புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் ஷிவானி.. கிறங்கி போன இளசுகள்

அத்துடன் இந்த சீரியலின் கதை ஏற்கனவே படமாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விசுவின் சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தின் கதை அம்சத்தை வைத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆகையால் விறுவிறுப்பும் சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லாத கிழக்கு வாசல் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள் என சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்ல சன் டிவியின் சித்தி 2 சீரியலுக்கு பிறகு முதல் முதலாக விஜய் டிவிக்கு வருகை தந்திருக்கும் ராதிகாவின் நடிப்பையும், சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் எஸ்ஏசி-யின் நடிப்பையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில் கிழக்கு வாசல் சீரியலின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிடப் போகிறது.

Also Read: விஜய் டிவியின் குத்துவிளக்கு பிரியங்காவா இது.? மாலத்தீவில் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட வைரல் வீடியோ!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்