விஜய் மனசு வச்சா தான் முடியும்.. போட்டி அதிகமானதால் இசை வாரிசுக்கு வந்த பெரும் சிக்கல்

தமிழ் சினிமாவில் 25 வருட இசைப் பயணத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையை தவிர்க்கவே முடியாது என்ற அளவிற்கு இவருடைய இசையை ரசிப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. 1994 ஆம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, அதன்பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார், துள்ளுவதோ இளமை, பருத்திவீரன் என 100 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார்.

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா, தளபதி விஜயின் படத்தில் அடுத்ததாக எப்போது பணியாற்றுவார் என ரசிகர்கள் ஏக்கத்துடன் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். தல அஜித்துக்கு பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வலிமை போன்ற படங்களில் தல அஜித்தை  அவருடைய இசையில் வலுவான பின்னணி இசையுடன் மாஸ் காட்ட செய்த பெருமைக்குரியவர்.

இதேபோன்று யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் தளபதியின் படங்கள் வெளியாக வேண்டும் என அவருடைய ரசிகர்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து யுவன் ஷங்கர் ராஜாவிடம் கேட்டபோது தளபதி விஜய்க்கு படம் பண்ண நானும் ரெடியாக இருக்கிறேன் என ஆவலுடன் பதிலளித்தார்.

இவரது பதிலை பார்த்தால் நிச்சயம் தளபதி விஜய்யின் அடுத்த படங்களில் இவன் கமிட் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே பீஸ்ட் படத்தை முடித்த கையோடு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் தளபதியின் 66-வது படத்தை  இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதியின் 67- வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். அடுத்ததாக தளபதி விஜய்யின் 68-வது படத்தை அட்லி இயக்க வாய்ப்பு இருப்பதால் அந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இப்படி ஏதாவது பிட்டு போட்டால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவே இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தளபதி விஜய்க்கு இசையமைக்க மிக அதிக ஆர்வத்துடன் இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் இவருடைய இசையில் தளபதி விஜயின் படம் வந்தால் நிச்சயம் பின்னிப் பெடலெடுக்கும் என்பதற்காகவே அவருடைய ஆசை நிறைவேறினால் தப்பில்லை.

Next Story

- Advertisement -