ரியோவுடன் கூட்டணி போட்ட யூடியூப் புகழ்.. பிரஸ்மீட்டில் நடந்த சுவாரஸ்யம்.!

தற்போதெல்லாம் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளைவிட யூடியூப், இன்ஸ்டாகிரம் போன்றவற்றில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர்கள் தான் அதிகம் உள்ளனர். யூடியூபில் வீடியோ பதிவிட்டே திரைப்பட வாய்ப்புகளை பெற்றவர்கள் ஏராளாம். அந்த வரிசையில் எருமை சாணி விஜய், ப்ராங்க் ஸ்டார் ராகுல், பிளாக் ஷீப் விக்னேஷ் காந்த் என சொல்லிக்கொண்டே போகலாம்.

தற்போது இந்த வரிசையில் யூடியூப் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவியும் இணைந்துள்ளார். இவரை பூர்ணிமா என கூறுவதைவிட அராத்தி என்று கூறினால் தான் பலருக்கும் தெரியும். நரிக்கூட்டம் என்ற யூடியூப் சேனல் மூலம் நடிக்க தொடங்கிய பூர்ணிமாவிற்கு ரசிகர்கள் ஏராளம். இதனால் தற்போது அராத்தி என்ற புதிய சேனல் தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இவரது வீடியோக்களுக்கு கிடைத்த வரவேற்பின் பலனாக தற்போது இவர் வெள்ளித்திரையில் அறிமுமாகி உள்ளார். பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் ரியோ மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் தான் பூர்ணிமா ரவி நடித்துள்ளார். இந்த படம் தான் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிட்டிக் ப்ரிண்ட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரியோ, ரம்யா நம்பீசன், பூர்ணிமா ரவி உள்ளிட்ட அனைத்து படக்குழுவினர்களும் பங்கேற்றனர்.

araathi
araathi

அப்போது பேசிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், “இப்படத்தில் ரியோ சிறப்பாக நடித்துள்ளார். இன்னும் பல படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ரம்யா நம்பீசன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர். எளிதில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார். இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார்.

பால சரவணன் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பார். பூர்ணிமா ரவி இளைய தலைமுறை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெறுவார். 100% காமெடி சரவெடியாக இப்படம் இருக்கும். அனைவரும் இப்படத்தை நிச்சயம் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும்” என கூறினார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்