ஓடிடியால் பெருத்த அடி வாங்கிய யூடியூப் சேனல்கள்.. ஒரு வருடத்திற்கு ஹாட்ஸ்டார் கட்டிய கல்லா எவ்வளவு கோடி தெரியுமா?

ஆரம்பத்தில் தியேட்டர் மற்றும் தொலைக்காட்சியை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு தங்களிடம் உள்ள கைபேசியின் வாயிலாக வீடியோக்களை அதிகம் பார்க்க ஆரம்பித்தனர். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட யூடியூபர்கள் நிறைய பேர் படையெடுக்க தொடங்கி விட்டனர்.

ஆளாளுக்கு ஒரு யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் நல்ல வருமானமும் ஈட்டி வருகிறார்கள். இந்த சூழலில் யூடியூபூக்கு பெருத்த அடி வாங்கிய வருடம் என்றால் கொரோனா காலகட்டம் தான். அதாவது தியேட்டருக்கு போக முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த சினிமா ரசிகர்களுக்கு அப்போது வழிகாட்டியது ஓடிடி தான்.

Also Read : வெப் சீரியஸ் நடிகை என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. வாய்ப்பு இல்லாமல் ஓடிடியில் தஞ்சம் அடைந்த அமலாபால்

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அப்போது படங்களை ஒடிடியில் வெளியிட முன் வந்தனர். இப்போது வரை அது தொடர்ந்து வருகிறது. டாப் நடிகர்கள் படங்கள் மட்டும் தான் சமீபகாலமாக தியேட்டரில் வெளியாகிறது. அதுவும் தியேட்டரில் வெளியான ஒரு மாதத்திலேயே ஓடிடியிலும் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் ஓடிடியால் கடந்த வருடங்களில் இல்லாத அளவுக்கு யூடியூப் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதாவது இந்தியாவில் கடந்த ஒரு வருடத்திற்கு யூடியூபூக்கு பத்தாயிரம் கோடி மட்டுமே ரெவென்யூ கிடைத்துள்ளது. மேலும் ஓடிடிக்கு ஒரு வருடத்திற்கு 10,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Also Read : ஓடிடி-யின் மூலம் கவர்ச்சியில் தாராளம் காட்டும் 5 நடிகைகள்.. இளசுகளை ஜொள்ளு விட வைத்த ராதிகா ஆப்தே

இதில் ரசிகர்கள் அதிகம் பார்க்கும் ஓடிடி நிறுவனங்களில் ஹாட் ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ஹாட் ஸ்டார் 4300 கோடி ஒரு வருடத்திற்கு லாபம் பார்த்துள்ளது. அதேபோல் நெட்பிளிக்ஸ் 1600 கோடி கல்லா கட்டியது.

மேலும் ஓடிடி மற்றும் யூடியூப் இரண்டுமே இப்போது சரிசமமாக வருமானம் பெற்று இருந்தாலும் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை யூடியூபின் வருமானம் குறைவு தான். ஆனால் ஓடிடி தனது வருமானத்தை அதிகப்படுத்தி உள்ளது. ஆகையால் அடுத்த வருடம் ஓடிடி இன்னும் அதிகமாக கல்லா கட்ட வாய்ப்பு இருக்கிறது.

Also Read : ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த சூர்யா 42.. ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்