23 வயதிற்குள் இரட்டை சதம் அடித்த மூன்று இந்தியர்கள்.. ஜெய்ஸ்வாலுக்கு முன்னரே விளாசிய 2 பேர்

3 Double ton at very young age: டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது என்பது எல்லோருக்கும் ஒரு மிகப்பெரிய கனவு. விளையாட வந்த புதிதில், ஆரம்ப காலகட்டத்தில் இச்சாதனையை நிகழ்த்துவது குதிரை கொம்பு அதிலும் அணிக்குள் வந்தவுடனே குறைந்த வயதில் எட்டுவது என்பது மிகப்பெரிய சவால் நிறைந்த ஒன்று.

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இளவயது புயலாகிய  இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். இவர் அறிமுகமான முதல் டெஸ்ட் தொடர் இதுதான். தனது முதல் தொடரிலேயே அடித்திருப்பது ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது.

இவருக்கு முன்னர் இந்திய அணியில் இரண்டு ஜாம்பவான்கள் குறைந்த வயதில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அப்படி எந்த வயதில் அந்த இரண்டு வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதை தெரிந்தால் மிகவும் அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது.

Also Read: ஓய்வு முடிவில் ஆல்ரவுண்டர்.. ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து இந்திய அணிக்கு அடுத்த அடி

வினோத் காம்ளி: சச்சின் டெண்டுல்கர், வினோத் கம்பளி இருவரும் பள்ளி பருவத்திலிருந்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். மும்பையை சேர்ந்த இவர்கள் இந்திய அணிக்குள் ஒரு சேர தேர்வு செய்யப்பட்டனர். வினோத் காம்ளி இங்கிலாந்துக்கு எதிராக தனது 21 வயது 32 நாட்களில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

சுனில் கவாஸ்கர்: டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்திற்கு சொந்தக்காரர் டான் பிரட் மேன் . இவருக்கு அடுத்தபடியாக புகழப்பட்டவர் சுனில் கவாஸ்கர். அந்த அளவுக்கு ரசித்து ருசித்து டெஸ்ட் போட்டிகளை விளையாடக் கூடியவர். இவர் தனது இரட்டை சதத்தை 21 வயது 277 நாட்களில் அடித்து அசத்தியுள்ளார்.

எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால்: சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் இந்த இளம் ஹீரோ. இவர் தந்தை பாணி பூரி வியாபாரம் செய்பவர். இப்பொழுது இந்திய அணியில் கலக்கிக் கொண்டிருக்கிறார் ஜெய்ஸ்வால். இவர் தனது 22 இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் 209 ரன்கள் அடித்துள்ளார்.

Also Read: 2 நட்சத்திர வீரர்கள் அணியில் இருந்து விலகல்.. இந்திய அணிக்கு இடி போல் விழுந்த மரண அடி