ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்குமா.? பலமுறை வெற்றிமாறனை சுற்றி வந்த ஹீரோ, வச்சு செய்த சம்பவம்

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கக் கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவருடைய பேருக்கு ஏற்ப எடுக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று கொண்டிருப்பதால், டாப் நடிகர்களும் இவருடைய படத்தில் நடிப்பதற்கு தவமாய் தவம் இருக்கின்றனர்.

ஏனென்றால் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் சமீபத்தில் வெளியான விடுதலை 1 போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். விரைவில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக காத்திருக்கிறது.

Also Read: விடுதலையால் ஓரம் கட்டப்பட்ட பத்து தல.. சிம்புவுக்கு வெற்றியா, தோல்வியா? மொத்த ரிப்போர்ட்

அதுமட்டுமல்ல அந்த படத்தை ரிலீஸ் செய்த கையோடு சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தையும் இயக்க உள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை ஒருமுறையாவது வெற்றிமாறன் பட வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்படுகின்றனர்.

அப்படி இவருடன் ஒரே ஒரு படத்தில் இணைந்து விட வேண்டும் என இளம் நடிகர் ஒருவர் சுற்றி சுற்றி வந்திருக்கிறார். கடைசியில் அவருக்கு நேர்ந்த சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது. அதாவது ஹரிஷ் கல்யாண் அவருக்கு வெற்றிமாறன் படத்தில் இரண்டு காட்சிகளில் நடிப்பது எனது கனவு என கூறியிருக்கிறார்.

Also Read: விஜய் சேதுபதி பையனை வைத்து வெற்றிமாறன் போடும் திட்டம்.. திருப்தி அடையாத முதல் பாகம்

இதனால் வெற்றிமாறனை பார்க்கும் போதெல்லாம் அவரிடம் தானாக போய் பேசுவது, அதுவும் தேடி சென்று போய் எல்லா இடங்களிலும் பூங்கொத்து கொடுத்திருக்கிறார். வெற்றிமாறன் கோபத்தில் எதற்கு தினந்தோறும் இப்படி எதற்கு என்னை வந்து பார்க்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு ஹரிஷ் கல்யாண் இப்படி வந்தால் தான் நீங்கள் என்னை மறக்க மாட்டீர்கள். நடிக்க கூப்பிடுவீர்கள் என்று கூறி இருக்கிறார்.

அதற்கு வெற்றிமாறன், எனது கதைக்குத் தேவைப்பட்டால் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கூப்பிடுவேன். தயவுசெய்து இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு செய்ய வேண்டாம். நானே கூப்பிடுகிறேன் போ! எனக் கூறியுள்ளார். இதை அவர் அவமானமாக நினைக்கவில்லை. இருந்தாலும் இந்த தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Also Read: தொடர்ந்து அந்த கெட்ட பழக்கம் இருந்தால் நான் சொல்றதை கேளுங்க.. வெற்றிமாறன் கூறும் சீக்ரெட்

Next Story

- Advertisement -