நயன்தாராவுடன் போட்டி போட்ட சேச்சி.. ஓவர் பில்டப் கொடுத்து மூக்குடைந்த சம்பவம்

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தோல்வி படங்களை கொடுத்தாலும் கெத்து குறையாமல் இருக்கும் நயன்தாரா இடத்தை பிடிக்க பல நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர். அதிலும் புதிதாக வரும் இளம் நடிகைகள் நம்பர் ஒன் ஹீரோயினாக வேண்டும் என வெறிகொண்டு திரிகின்றனர். இதை பல நடிகைகள் மறைமுகமாக வெளிப்படுத்தியும் வருவதுண்டு.

ஆனால் ஒரே ஒரு நடிகைக்கு மட்டும் நயன்தாரா மீது அப்படி என்னதான் கோபமோ தெரியவில்லை. பல விஷயங்களில் அவரை சீண்டும் விதமாக பேட்டி கொடுத்து மீடியாவை பரபரப்பாகி கொண்டு இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் மாளவிகா மோகனன் தான். ரஜினி, விஜய் படங்களில் நடித்து விட்டார் என்பதாலேயே இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது.

Also read: வீட்டுக்குள்ளே முடங்கிப் போன விக்னேஷ் சிவன்.. தேடி சென்று துக்கம் விசாரிக்கும் பிரபலங்கள்

ஆனால் அம்மணியின் நடிப்பு திறமையை பார்த்த பலரும் இப்போது பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கின்றனர். இருந்தாலும் தற்போது இவர் விக்ரமின் தங்கலான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் பட வாய்ப்பு பெறுவதற்காக அரை குறை ஆடையுடன் போட்டோ சூட் நடத்துவது போன்ற வேலைகளையும் இவர் தாராளமாகவே செய்கிறார். இது சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு இவர் சமீப காலமாக நயன்தாரா குறித்து பல விஷயங்களை பேசி வருகிறார். அதிலும் அவரின் மேக்கப் குறித்தும் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் இவர் பேசியது ரசிகர்களை மிகவும் கடுப்பேற்றியது. அதை தொடர்ந்து அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது அம்மணி கேரியர் பயத்தில் இருக்கிறாராம்.

Also readஅஜித், நயன்தாராவை ஒதுக்க இதுதான் காரணமா..? தயாரிப்பாளர்களை பரிதவிக்க விடும் லேடி சூப்பர் ஸ்டார்.

அதாவது இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் கிறிஸ்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ரொமான்டிக் காதல் படமாக உருவாகி இருந்த அந்த திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஏனென்றால் இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே மாளவிகா அது குறித்து ஓவர் பில்டப்புகள் செய்திருந்தார். அதனாலேயே இப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்க தியேட்டருக்கு வந்தனர்.

ஆனால் முதல் காட்சியிலேயே படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது காட்சிக்கு கூட்டமே வரவில்லையாம். அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் படத்தை பற்றி கழுவி ஊற்றி வருகின்றனர். இதனால் மாளவிகாவின் கோபம் இப்போது இயக்குனர் மேல் திரும்பி இருக்கிறதாம். இருந்தாலும் அவரின் ராசி அப்படி என்று பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இப்படி நயன்தாராவை எல்லாம் வம்புக்கு இழுத்து படத்தை பற்றி ஓவர் பில்டப் செய்த மாளவிகா இப்போது மூக்கு உடைந்து போயிருக்கிறார்.

Also read: எஸ்ஜே சூர்யா உடன் கிசுகிசுக்கப்பட்ட 4 நடிகைகள்.. 54 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருப்பதால் வந்த வினை

Next Story

- Advertisement -