வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சிரிச்சு சிரிச்சு கழுத்தறுத்த தோழி.. நம்பிக்கை துரோகம் செய்த ஹீரோ, விவாகரத்துக்கு ரெடியாகும் காதல் மனைவி

எந்த புத்துக்குள் எந்த பாம்பு இருக்கும் என்றே தெரியவில்லை. அப்படித்தான் மாஸ் ஹீரோவின் நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. ஓவர் நைட்டில் உச்சாணி கொம்புக்கு சென்ற இவருடைய மார்க்கெட் இப்போது சரசரவென சரிந்துள்ளது. அந்த அளவுக்கு சேர்த்து வச்ச நல்ல பெயர் எல்லாம் காணாமல் போய்விட்டது.

சமீபத்தில் இசை பிரபலம் வெளியிட்ட ஒரு கருத்து மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல பிரபலங்களும் ஆமாம் அவர் அப்படித்தான் என்று சப்போர்ட் செய்து வந்த நிலையில் மாஸ் ஹீரோ இப்போது வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு நொந்து நூலாகி போயிருக்கிறார்.

இதனால் அவருடைய வீட்டிற்குள்ளும் பலத்த புயல் வீசிக் கொண்டிருக்கிறதாம். ஏனென்றால் இரு குடும்பங்களும் நட்புறவுடன் ஒட்டி உறவாடி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த மனஸ்தாபம் இருந்திருக்கிறது. ஆனால் தற்போது அம்பலமாகி இருக்கும் விஷயம் நடிகரின் மனைவிக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தோழியாக பழகி வந்தவர் விஷ பாம்பாக மாறியிருப்பதும், கணவனே நம்பிக்கை துரோகம் செய்திருப்பதும் அவரை உருக்குலைய வைத்துவிட்டதாம். சிரிச்சு சிரிச்சு பேசி கழுத்தறுத்தவர்களின் இந்த ரகசியம் இப்போது குடும்ப உறவை உடைக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.

அதனால் தன் மீது எந்த தப்பும் இல்லை என நடிகர் மனைவி மற்றும் குடும்பத்தினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இப்போது இருக்கிறாராம். ஆனால் காதல் மனைவி திருமண பந்தத்தையே உடைக்கும் முடிவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்து கொண்டிருக்கிறது. அதனால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து அறிவிப்பு வரலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.

இதற்கெல்லாம் பின்னணியில் பிரபல நடிகர் ஒருவர் இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. ஏனென்றால் இந்த இளம் ஹீரோ போடாத ஆட்டம் கிடையாது. அதனால் தான் அனுபவிக்கிறார் என்று கூறுகின்றனர். ஆக மொத்தம் இடியாப்ப சிக்கல் போன்ற பிரச்சனையில் மாட்டி தவிக்கும் நடிகர் எப்படி இதை சரி செய்யப் போகிறார் என ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறது.

- Advertisement -

Trending News