வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அவரு டைட்டிலெல்லாம் நடிக்க முடியாது.. யோகிபாபுவால் பெரும் சிக்கலை சந்தித்த படக்குழு

தற்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் யோகிபாபு தான் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால்பதிக்க உள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் யோகிபாபு நடித்து வருகிறாராம்.

இதுதவிர யோகிபாபு ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகி பாபு தற்போது பிக் பாஸ் ஓவியாவுடன் இணைந்து கான்ட்ராக்டர் நேசமணி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுவதீஸ் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தின் டைட்டில் ஆறு மாதங்கள் முன்பே பெயர் வைக்கப்பட்டது. வடிவேலு பிரண்ட்ஸ் படத்தில் கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருவர் இணையத்தில் விளையாட்டாக காண்ட்ராக்டர் நேசமணிக்காக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகி பிரதமர் மோடி வரை டுவிட் செய்திருந்தார். அந்தளவுக்கு வடிவேலுவின் கான்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரம் ஃபேமஸ் ஆனது. ஆனால் இப்பொழுது யோகி பாபு இந்த டைட்டில் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் அந்த டைட்டிலுக்கு சொந்தக்காரர் வடிவேலு.

அதனால் இப்படத்திற்கு காண்ட்ராக்டர் நேசமணி என்ற டைட்டில் வேண்டாம் என படக்குழுவுக்கு யோகி பாபு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். இதனால் தற்போது இந்த படத்தின் பெயரை படக்குழு மாற்றியுள்ளது. அதாவது இப்படத்திற்கு புதிதாக பூமர் அங்கிள் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த சிலர் மிகப்பெரிய காமெடி ஜாம்பவானான வடிவேலு கதாபாத்திரத்தின் பெயரை தன் படத்தில் வைக்க யோகி பாபு தயக்கம் காட்டுவது ஏன் என பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் வடிவேலின் மீதுள்ள மரியாதை காரணமாக தான் யோகி பாபு இந்த படத்தின் டைட்டிலை மாற்ற சொல்லியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Trending News