ஒரு நாளைக்கு யோகி பாபு வாங்கும் சம்பளம்.. வடிவேலுவை விட மோசமான ஊதாரி தனத்தில் ஊறிப்போன மண்டேலா

தமிழ் சினிமாவில் காமெடி பண்ணுவதற்கு பெரிய பஞ்சம் நிலவி வருகிறது. விவேக், வடிவேலு, சந்தானம் சூரி என யாருமே இப்பொழுது ட்ராக்கில் இல்லை, இப்போது இருக்கும் ஒரே காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபு மட்டும்தான். இவர் காட்டில் இப்பொழுது அடை மழை பெய்து வருகிறது

அவரும் எத்தனை படங்கள் தான் நடிக்க முடியும். அவர் நடிப்பில் வருத்தத்திற்கு 8 முதல் 12 படங்கள் வரை வெளி வருகிறது. தொடர்ந்து ஒரே முகத்தை பார்த்தால் கூட ரசிகர்களுக்கு சலிப்பு தட்டி விடும். தற்சமயம் யோகி பாபு கையில் 10 படங்களுக்கு மேல் இருக்கிறது.

வேலை பளு காரணமா, அல்லது பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்று தெரியவில்லை, மோசமான ஆட்டிட்யூட்டில் ஊறி போய் உள்ளார் யோகி பாபு. இவரைப் பற்றி கேள்விப்படும் விஷயங்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வடிவேலுவை விடவும் மோசமாய் நடந்து கொள்கிறாராம்.

வடிவேலுவை விட மோசமான ஊதாரி தனத்தில் ஊறிப்போன மண்டேலா

ஒரு நாளைக்கு 12 லட்சங்கள் வரை சம்பளம் கேட்கிறார். நெருங்கிய வட்டாரம், தெரிந்த முகம் என்றால் 10 லட்சம் வரை வாங்குகிறார். அப்படி வாங்கியும் இவர் இஷ்டத்துக்கு தான் கால் சீட் கொடுப்பாராம். இன்று இந்தப் படம் நடிக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. அவர் பிடித்த இடத்திற்கு தான் சூட்டிங் போவாராம்.

பெரிய ஹீரோக்கள் படங்கள் என்றால் சின்ன ஹீரோக்கள் படங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்கள் படங்களுக்கு நடிக்க சென்று விடுவாராம். படப்பிடிப்பிலிருந்து ஏதேனும் கேட்டால் இன்னொரு நாள் கால் சீட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஊதாரித்தனமாக பேசுகிறாராம்.

Next Story

- Advertisement -