ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

யோகி பாபு இடத்தை பிடித்த விஜய்யின் செல்லபிள்ளை.. இவர் இல்லனா தளபதி நடிக்க மாட்டாராம்

Vijay and Yogi babu: சினிமாவில் எல்லா கேட்டகிரிக்கும் போட்டி போட்டு நடிப்பதற்கு எக்கச்சக்கமான நடிகர் நடிகைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் ஒரு நிலையான நடிகர் என்று தற்போது யாரும் இல்லாமல் போய்விட்டது. அதாவது செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக் மற்றும் சந்தானம் இவர்கள் அனைவரும் நகைச்சுவை நடிகர் என்று அவருக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்று விட்டார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக இன்னும் யாரும் வரவில்லை.

ஆனாலும் தன்னுடைய தோற்றத்தாலையும் பேச்சாளையும் மற்றவர்களை ரசிக்க வைத்து நகைச்சுவையில் தற்போது ஒரு இடத்தை பிடித்தவர் தான் யோகி பாபு. ஆனால் இவரும் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதோடு கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அதனால் இப்போது காமெடி நடிகர் என்ற கேட்டகிரியில் விஜய்யின் செல்லப் பிள்ளையாக விடிவி கணேசன் அந்த இடத்தை பிடித்திருக்கிறார்.

இவரு விஜய்யின் செல்ல பிள்ளையா? என்று கேட்டால் ஆமாங்க அதுதான் உண்மை. அது எப்படி என்றால் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததில் இருந்தே அவருடைய ஃபேவரைட் காமெடி ஆக்டர் ஆக மாறிவிட்டார். அதாவது பீஸ்ட் படத்தின் சூட்டிங் நேரத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மற்ற நேரங்களில் விடிவி கணேசனிடம் உட்கார்ந்து நிறைய பேசிக்கொண்டு ஜாலியாக நேரத்தை செலவிட்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் விஜய்யை அதிகமாக கவர்ந்திருக்கிறார். அதனால்தான் தற்போது இவர் நடிக்கும் படங்களில் அவருடைய காட்சி வேண்டும் என்றே விஜய் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு இயக்குனரிடமும் சிபாரி செய்து வருகிறார். அப்படித்தான் வாரிசு படத்திலும் ஒரு காட்சியில் நடிப்பதற்கு விடிவி கணேசனை கூப்பிட்டு இருக்கிறார்.

அதே மாதிரி அடுத்து நடிக்கப் போகும் தளபதி 68 படத்திலும் இவர் நடிக்க வேண்டுமென்று வெங்கட் பிரபுவிடம் சொல்லி இருக்கிறார். அதேபோல தளபதி 68 படத்தில் அவர் நடிக்கப் போகிறார். அத்துடன் ஜெயிலர் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மெர்சல் ஆக்கி இருப்பார்.

அத்துடன் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் தற்போது இவருடைய முத்திரையை பதிவிட்டு வருகிறார். அதாவது பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த பகவந்த் கேசரி படம் தெலுங்கில் செம ஹிட் ஆகியிருக்கிறது. அதிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கைதட்டலையும் பெற்றிருக்கிறார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து யோகி பாபு இடத்தை பிடித்துக் கொண்டு வருகிறார்.

- Advertisement -

Trending News